ஹீரோ .. ஹீரோ ..
"மின்னலே" இயக்குனர் கெளம் மேனனின் புதிய படமான காக்க .. காக்க படத்தில் முதலில் நடிக்க அனுகப்பட்டவர்அஜீத் தானாம். ஆனால், அவர் மறுக்கவே விக்ரமை அணுகியுள்ளனர். அவரும் மறுக்கவே, பின்னர் புக்ஆனவர்தான் சூர்யாவாம்.
மின்னலே படத்திற்குப் பிறகு தமிழில் காக்க காக்க படத்தை இயக்கியுள்ளார் கெளதம் மேனன். இந்தப் படத்தில்காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் சூர்யா. படம் முழுவதும் கலக்கியுள்ளாராம் சூர்யா.
இதற்காக மிக மாறுதலான கெட்டப்புடன் தன்னையே மாற்றிக் கொண்ட சூர்யா, நடிப்பிலும் வித்தியாசத்தையும்கொடுத்துள்ளாராம்.
முதலில் இந்தக் கதையை அஜீத்திடம் சொல்லியுள்ளார் கெளதம். ஆனால் கதை சரியில்லை என்று கூறி விட்டாராம்அஜீத். அடுத்து விக்ரமிடம் சென்றுள்ளார். இதே போன்ற ஒரு கதையில் (சாமி) நடிக்கப் போவதால் காக்க காக்கவேண்டாம் என்று கூறி விட்டாராம் விக்ரம்.
இதையடுத்து சூர்யாவை அணுகினார். அவர், உடனே ஒ.கே சொல்லி விடவே ஷூட்டிங் ஆரம்பமானதாம்.சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்துள்ளார்.
ரம்யா கிருஷ்ணனும் (கல்யாணத்துக்கு முன்) ஒரு பாட்டுக்கு அமர்க்களமான ஆட்டம் போட்டுள்ளாராம். 80நாட்களில் படப்பிடிப்பை முடித்துள்ளார்களாம்.
சென்னை, கொழும்பு உள்ளிட்ட சில நகரங்களில் ஷூட்டிங்நடந்துள்ளது.
படத்தின் கதை வலுவாக இருப்பதோடு, சூர்யாவின் நடிப்பும் இதில் பேசப்படுமாம். ஜோதிகாவும் நன்றாகநடித்துள்ளாராம். இந்தப் படம் ஹிட் ஆனால் இந்தியில் இதை எடுக்க கெளதம் மேனன் முடிவு செய்துள்ளார்என்கிறார்கள்.
இந்த மாத இறுதியில் ரிலீஸ் ஆகும் இந்தப் படம் ஹிட் ஆனால், சூர்யா- ஜோதிகா டும் டும்மும் நடக்கும்என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











