ஹீரோ .. ஹீரோ ..

By Staff

லிங்குசாமி இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் ஜீ படத்தின் சூட்டிங் கோவையில் நடந்து வருகிறது. அஜீத்தின் 38வது படம் இது. கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் நடந்த சூட்டிங்கின்போது நிருபர்களிடம்அஜீத் கூறியதாவது:

ஆஞ்சநேயா வெற்றிப் படம் தான். என்ன?, எதிர்பார்த்த அளவு வெற்றியில்லை. அதற்குக் காரணம் தீபாவளிக்குரீலிஸ் செய்ய வேண்டும் என்ற நோக்கில் அவசர அவசரமாகப் படத்தை முடித்ததுதான். வெறும் 45 நாட்களில்சோறு, தண்ணியில்லாமல் உழைத்து படத்தை வெளியிட்டோம். வர்த்தரீதியில் வெற்றிதான் என்றாலும் நினைத்தஅளவுக்கு வெல்லவில்லை.

சூப்பர் ஸ்டார் இடத்தை யார் வேண்டுமானாலும் பிடிக்கலாம் என்று ரஜினிகாந்த் ஒரு விழாவில் தெரிவித்திருந்தார்.எனக்கு சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்ததால் ‘ஆஞ்சநேயா’ படத்தின் மூலம் அதற்குஅப்ளிகேஷன் போடுகிறேன் என்று பேட்டி கொடுத்திருந்தேன்.

ஆனால் சிலர் ரஜினியை நான் தாக்கிப் பேசுவதாக பொய்யான பிரச்சாரம் செய்துவிட்டனர். கார் ரேசில்பங்கேற்பவர்கள் எல்லோரும் முதலாக வருதற்கு ஆசைப்படுவது போலத்தான் நானும் சூப்பர் ஸ்டார் இடத்தைப்பிடிக்க ஆசைப்படுகிறேன். ஆசைப்படுவது தவறா?

கார் ரேசில் வெற்றிபெற டிரைவிங்கும், வண்டியும் நன்றாக இருக்கவேண்டும். ஆஞ்சநேயா படத்தில் எனதுடிரைவிங் நன்றாகவே இருந்தது.

வண்டி(திரைக்கதை) சரியாக இல்லாததால் வெற்றி பெற முடியவில்லை. எனவேஅடுத்தப் படத்தில் கடுமையாக உழைத்து கட்டாயம் ஜெயிப்பேன்.

ஒரு படத்தில் வெற்றி பெற்று பெறுவதின் மூலம் சூப்பர் ஸ்டாராகி விட முடியாது. கதை எவ்வளவு மோசமாகஇருந்தாலும் ஒரு ஹீரோவின் படம் வெற்றி பெற்றால் தான் அவர் சூப்பர் ஸ்டார். எம்.ஜி.ஆர், ரஜினி படங்கள்அப்படி ஓடியதால்தான் சூப்பர் ஸ்டார் ஆனார்கள்.

நானும் ஒரு நாள் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை அடைந்தே தீருவேன். அதற்காக இன்னும் கடுயாைக உழைப்பேன்என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X