ஹீரோ .. ஹீரோ ..

By Staff

சமீபகாலமாக வில்லன்களை அடித்து நொறுக்கிக் கொண்டிருந்த அஜீத், கும்மாங்குத்துக்களை எல்லாம் மூட்டை கட்டி விட்டு காமெடி டிராக்குக்குத்தாவுகிறார்.

எழில் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் இரண்டாவது படம் ராஜா. இதில் முழுக்க முழுக்க காமெடியில் கலக்கி வருகிறாராம் அஜீத்.

எழில் இயக்கிய முதல் படமான பூவெல்லாம் உன் வாசம் சுமாராக போயிருந்தாலும் கூட இயக்குனரை அஜீத்துக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டதாம். அதனால்தான் ராஜா குறித்து அவர் கூறியபோது மறுப்பேதும் சொல்லாமல் ஒத்துக் கொண்டாராம்.

இன்னொரு காரணம், அஜீத்துக்கு அந்தப் படத்தில் எழில் அமைத்துள்ள கேரக்டர். இதுவரை காதல் செய்வதுஇல்லை அடிப்பது என்று மட்டுமே நடித்துக் கொண்டிருந்த அஜீத்துக்கு முதல் முறையாக முழு அளவில் காமெடிரோல் உருவாக்கிக் கொடுத்துள்ளாராம் எழில்.

அதேசமயம் அவ்வப்போது கும் கும் சண்டைகளும் உண்டாம்.

உங்களுக்கு எதுக்கு சார் இதெல்லாம்... உங்களுக்கு காமெடி வருமா என்று நேரடியாக அட்டாக் செய்தோம்.

காமெடி செய்ய முயன்றுள்ளேன். நன்றாக வரும் என்று நம்புகிறேன். ஒவ்வொரு கேரக்டரையும் நம்பிக்கையுடன்தானே செய்கிறேன் என்றார் கோபப்படாமல்.

ராஜா பெரும் வெற்றியைப் பெறும் என்று கூறும் அஜீத், ஒரு படத்தின் வெற்றி, தோல்வியை முடிவு செய்யவேண்டியது ரசிகர்கள்தான் என்று ரசிகர்கள் தலையில் பொறுப்பை வைக்கிறார்.

இது நல்ல எஸ்கேப் பார்முலாவா இருக்கே என்றபோது கண்சிமிட்டி சிரித்துவிட்டு ஓடிவிட்டார்.

ராஜாவில் அஜீத்திற்கு இரண்டு ஜோடிகளாம். ஜோதிகாவும், பிரியங்கா திரிவேதியுமாம். இவர்கள் போதாது என்றுமந்த்ரா வேறு வருகிறாராம். அஜீத்துடன் ஒரு டான்ஸ் போடப் போகிறார்.வாழ்ந்துக்கோ ராசா.. வாழ்ந்துக்கோ...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X