ஹீரோ .. ஹீரோ ..
தன் ரசிகர்கள் அரசியல் பக்கம் சாயக் கூடாது என்பதில் கண்டிப்பாக இருக்கிறார் அஜீத்.
அண்ணே என்று இவரைச் சுற்றி வந்த கும்பல் இவரை கொம்பு சீவிவிட்டு வந்தது ஒரு காலம்.அவர்கள் சொல்வதைக் கேட்டு விஜய்காந்தில் ஆரம்பித்து எல்லோரையும் விமர்சித்து வந்தார் அஜீத்.ஆனால், அடுத்தடுத்து படங்கள் ஊத்தவே இக் கும்பலை ஒதுக்கினார்.
இப்போது தன்னைச் சந்திக்கும் ரசிகர்களிடம் அரசியல் அது, இது ஆசையுடன் என்னுடன்இருக்காதீர்கள் என்று தெளிவாகச் சொல்லிவிடுகிறார்.
சினிமாவில் அவ்வப்போது அரசியல் வசனங்களைக் வைக்கலாமே என்று கூறும் தனது ரசிகர்களுக்குஅஜீத்திடம் இருந்து முதலில் டோஸ் கிடைக்கிறது. அடுத்தபடியாக அவர்களுக்கு அஜீத் சொல்லும்பதில் இதுதான்.
தமிழக மக்கள் என்னை ஒரு நடிகனாக மட்டுமே அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள். அதைச்சரியான முறையில் காப்பாத்திக்கிறது என் கடமை. தரமான படங்களைக் கொடுப்பது என் வேலை.
சமூகத்திற்குத் தேவையான கருத்துக்களை சொல்றதோ, அறிவுரை சொல்றதோ எனதுவேலையில்லை. அந்த அளவுக்கு எனக்கு அறிவும் இல்லை.
அரசியல் செய்யும் ஆர்வமும் எனக்குக் கிடையாது. ரசிகர்களுக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கஆசைப்படுகிறேன். என்னோட ரசிகர்களாக மட்டுமே நீங்க இருங்க. அரசியல் ஆசைகளைதேவையில்லாமல் வளர்த்துக்காதீங்க.
அப்படி ஆசை இருந்தால், தயவு செய்து எனது ரசிகராக இருக்காதீர்கள். அதற்கென்று ஆட்கள்இருக்கிறார்கள். அவர்களிடம் போய்விடுங்கள். நான் வெறும் நடிகன்தான் என்று வெட்டு ஒன்துண்டு டூ வாக சொல்லி விடுகிறார்.
அஜீத்துக்கு வெடி வைத்த வெடிமுத்து
அஜீத்தின் எதிர்ப்பையும், கெஞ்சலையும் மீறி என்னைத் தாலாட்ட வருவாளோ என்ற படத்தை வெளியிட்டு அவருக்கேவெடி வைத்துவிட்டார் படத் தயாரிப்பாளர் வெடிமுத்து.
அஜீத் ஒரு காலத்தில் நடித்த என்னை தாலாட்ட வருவாளோ படம் சமீபத்தில் வெளியாகி அதே வேகத்தில் ஊத்திக்கொண்டது. ரேஷ்மாவுடன் அஜீத் நடித்திருந்த இந்தப் படம் பல ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்தது.
இடையில் அஜீத் ஸ்டாராகிவிடவே படம் கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து ஆங்காங்கே ஒட்டு வேலைகள்பார்த்து படத்தை ரெடி செய்துவிட்டார் மிஸ்டர்.வெடி.
ஆனால், படத்தை திரையிட வேண்டாம். இதனால் எனதுஇமேஜ் பாதிக்கும். உங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தில் ஒரு பங்கை தந்துவிடுகிறேன் என்று அஜீத் தரப்பில்கூறப்பட்டது.
ஆனால், முழு நஷ்டத்தையும் ஈடுகட்டினால் ஓ.கே. ஒரு பங்கை மட்டும் கொடுத்தால் எப்படி? என்று கேட்டுபடத்தை ரிலீஸ் செய்துவிட்டார் வெடிமுத்து. படம் பெரும் ஊத்து ஊத்தி 4 நாளில் திரும்பி அவருக்கே பெட்டிகள்திரும்பி வந்துவிட்டன.
கோபத்தில் வெடித்துக் கொண்டிருக்கிறார் அஜீத்.


Click it and Unblock the Notifications











