அஜீத் ரசிகர்களின் பீர் அபிஷேகம்!! அஜீத்தின் பரமசிவன் படத்தை அவரது பாண்டிச்சேரி ரசிகர்கள் அடிதடி, மோதலுடன் வரவேற்றனர்.அஜீத்தின் கட்-அவுட்டுக்கு ரசிகர்கள் பீர் அபிஷேகமும் செய்தனர். மேலும் திரையைக் கிழித்தும் ரகளையில் ஈடுபட்டனர்.புதுவையில் உள்ள 2 தியேட்டர்களில் பரமசிவன் படம் திரையிடப்பட்டுள்ளது. ரசிகர் மன்றங்களுக்காக இரண்டு சிறப்பு காட்சிகள்ஒதுக்கப்பட்டிருந்தன. காலை காட்சியின் போது தியேட்டர் முன் வைக்கப்பட்டிருந்த அஜீத் கட்-அவுட்டிற்கு கற்பூரம் காட்சிரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர். இதை தொடர்ந்து பீர் அபிஷேகம் செய்து தல வாழ்க என்று கோஷமிட்டனர். பிறகு பீர் குடித்து மகிழ்ந்தனர்.அதே போதையில் படம் பார்க்க உள்ளே சென்றனர், படத்தின் முதல் பாடலான உண்டியலை கையில் வச்சி என்ற பாடலைஒன்ஸ்மோர் கேட்டு ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் ரசிகர்கள் திடீர்வன்முறையில் ஈடுபட்டனர்.அண்ணா சாலையில் உள்ள தியேட்டரில் ரசிகர்கள் மின்விசிறி மற்றும் இருக்கைகளை அடித்து சேதப்படுத்தினர். காமராஜர்சாலையில் உள்ள தியேட்டரில் பீர் பாட்டிலை தூக்கி எறிந்து திரையை கிழித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனேபோலீசார் வந்து ரகளையில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். தியேட்டரில் ரசிகர்கள் ஏற்படுத்திய நஷ்டத்தை மாநில தலைமை ரசிகர் மன்றம் தான் இதுவரை பொறுப்பேற்று வந்திருக்கிறது.சேதப்படுத்திய பிறகு நஷ்டத்தை கேட்டால் தரமாட்டார்கள் என்று தியேட்டர் நிர்வாகங்கள் முன்கூட்டியே ஒரு குறிப்பிட்டதொகையை தலைமை ரசிகர் மன்றத்திடம் இருந்து முன் பணமாக பெற்றுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.காசு தான் கொடுத்துவிட்டோமே என்று நினைத்தார்களோ என்னவோ, முடிந்தவரை தியேட்டர்களை அடித்து உதைத்துவிட்டுப்போயினர் தல ரசிகர்கள்.

By Staff

அஜீத்தின் பரமசிவன் படத்தை அவரது பாண்டிச்சேரி ரசிகர்கள் அடிதடி, மோதலுடன் வரவேற்றனர்.

அஜீத்தின் கட்-அவுட்டுக்கு ரசிகர்கள் பீர் அபிஷேகமும் செய்தனர். மேலும் திரையைக் கிழித்தும் ரகளையில் ஈடுபட்டனர்.

புதுவையில் உள்ள 2 தியேட்டர்களில் பரமசிவன் படம் திரையிடப்பட்டுள்ளது. ரசிகர் மன்றங்களுக்காக இரண்டு சிறப்பு காட்சிகள்ஒதுக்கப்பட்டிருந்தன. காலை காட்சியின் போது தியேட்டர் முன் வைக்கப்பட்டிருந்த அஜீத் கட்-அவுட்டிற்கு கற்பூரம் காட்சிரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.


இதை தொடர்ந்து பீர் அபிஷேகம் செய்து தல வாழ்க என்று கோஷமிட்டனர். பிறகு பீர் குடித்து மகிழ்ந்தனர்.

அதே போதையில் படம் பார்க்க உள்ளே சென்றனர், படத்தின் முதல் பாடலான உண்டியலை கையில் வச்சி என்ற பாடலைஒன்ஸ்மோர் கேட்டு ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் ரசிகர்கள் திடீர்வன்முறையில் ஈடுபட்டனர்.

அண்ணா சாலையில் உள்ள தியேட்டரில் ரசிகர்கள் மின்விசிறி மற்றும் இருக்கைகளை அடித்து சேதப்படுத்தினர். காமராஜர்சாலையில் உள்ள தியேட்டரில் பீர் பாட்டிலை தூக்கி எறிந்து திரையை கிழித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனேபோலீசார் வந்து ரகளையில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர்.


தியேட்டரில் ரசிகர்கள் ஏற்படுத்திய நஷ்டத்தை மாநில தலைமை ரசிகர் மன்றம் தான் இதுவரை பொறுப்பேற்று வந்திருக்கிறது.

சேதப்படுத்திய பிறகு நஷ்டத்தை கேட்டால் தரமாட்டார்கள் என்று தியேட்டர் நிர்வாகங்கள் முன்கூட்டியே ஒரு குறிப்பிட்டதொகையை தலைமை ரசிகர் மன்றத்திடம் இருந்து முன் பணமாக பெற்றுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காசு தான் கொடுத்துவிட்டோமே என்று நினைத்தார்களோ என்னவோ, முடிந்தவரை தியேட்டர்களை அடித்து உதைத்துவிட்டுப்போயினர் தல ரசிகர்கள்.

Read more about: ajiths paramasivan released
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X