அஜீத்தின் திருப்பதி அஜீத்தை வைத்து ஏவி.எம். நிறுவனம் ஒரு படத்தைத் தயாரிக்கிறது. படத்தின் பெயர் திருப்பதி.படத்தை இயக்கப் போவது திருப்பாச்சி, சிவகாசி ஆகிய ஊர் பெயரில் படங்களை இயக்கி வரும் இயக்குனர் பேரரசு தான்.அது ஏவிஎம்மின் 60வது ஆண்டு என்பதால் பல புதிய படங்களுக்கு அந் நிறுவனம் பூஜை போடவுள்ளது. ரஜினியை வைத்துஒரு படத்தை எடுக்க முயன்று வரும் அதே நேரத்தில் அஜீத்தை வைத்து எடுக்கப் போகும் இந்தப் படம் அந் நிறுவனத்தின்167வது படமாகும்.படத்துக்கு கதை தயாராகிவிட்டதோ இல்லையோ பேரரசுவின் வழக்கமான பார்முலாவின் படி ஊர்ப் பெயரான திருப்பதி,படத்தின் தலைப்பாக சூட்டப்பட்டுவிட்டது.தொடர்ந்து தோல்விப் படங்களையே தந்து வரும் அஜீத் சில மாதங்களுக்கு முன்பு வரை காட்பாதர் படத்தில் ஆசினுடன் நடித்துவந்தார். ஆனால், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாருடன் மோதல், மற்றும் சில பிரச்சனைகளால் படப்பிடிப்பு முடங்கிவிட்டது.முதலில் முட்டி, முட்டி நடந்த படப்பிடிப்பு இப்போது சுத்தமாக நின்று போய்விட்டதாக சொல்கிறார்கள்.இதனால், அந்தப் படத்தை அப்படியே அலேக் ஆக விட்டுவிட்டு பாலாவின் இயக்கத்தில் நானே கடவுள் படத்தில் நடிக்கத்தயாராகிவிட்டார் அஜீத். வழக்கமாக தனது படத்தில் நடிக்கும் ஹீரோவை உடலை மெலிய வைத்தோ, கூட்டி விட்டோஆளையே மாற்றிவிடும் பாலா, இதில் அஜீத்துக்கு இட்ட கட்டளை என்ன தெரியுமா?.உடலைக் குறைக்க வேண்டும் என்பது தான்.பாலாவின் கட்டளையை ஏற்று தனது ஊதிப் போன பீம்பாய் உடம்பை ஜிம்மில் கரைத்திருக்கிறார் அஜீத். கார் போட்டிகளில்பங்கேற்று ஏற்பட்ட விபத்துகளால் உடலின் உள்பகுதியில் ஏற்பட்ட காயங்களுக்கு மாத்திரைகள் உண்டு வருகிறார் அஜீத். ஒரு நாளைக்கு பல மாத்திரைகள் உண்டதால், அதன் பக்க விளைவாக உடல் எடை கூடியதாம். உடலைக் குறைக்க முடியாமல்திண்டாடி வந்த அஜீத், பாடல் காட்சிகளில் ஆடும்போது ஆபரேட்டர் உள்பட தியேட்டரே சிரிக்கும் நிலை ஏற்பட்டது.ஹாண்ட்சம் பையனாக தமிழ் சினிமாவுக்கு வந்த அஜீத், தொந்தியும் தொப்பையுமாக திரையை நிறைத்து நின்றார். கதைகள்சரியில்லாத படங்களில் நடித்து எல்லாம் ஊற்றிக் கொள்ளவே, இப்போது பாலாவை பெரிதும் நம்பியிருக்கிறார். பாலாவின் உத்தரவுப்படி உடலை பெருமளவில் குறைத்து சிக் என்று இருக்கிறார். கடந்த இரு மாதங்களில் 14 கிலோவைகுறைத்துவிட்டாராம். இப்போது ஜிம் பாடியுடன் துடிப்புடன் காணப்படுகிறார்.எடை குறைக்கப்பட்ட அஜீத்தை ஒரு முறை பார்வையிட்ட பாலா சூட்டிங்குக்கு ரெடி சொல்லிவிட்டாராம். இதனால் பெரும்மகிழ்ச்சியிலும் இருக்கிறார் அஜீத்.இந் நிலையில் தான் ஏவி.எம். நிறுவனம் தனது படத்திலும் அஜீத்தை புக் செய்திருக்கிறது. தற்கொலை வரை போனதயாரிப்பாளர் காஜா மொய்தீன் தனக்கு எதிராக போட்ட குண்டால் அதிர்ந்து போய் இருந்த அஜீத் முகத்தில் இப்போது தான்மீண்டும் மகிழ்ச்சிக் களை திரும்பியிருக்கிறது.நானே கடவுள் முடிந்தவுடன்ஸ திருப்பதி படத்தின் சூட்டிங் டிசம்பரில் தொடங்குகிறதாம். படத்தை அடுத்த ஏப்ரலில் தமிழ்ப்புத்தாண்டு அன்று ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள்.கொசுறு: ரஜினியின் பண்ணைத் தோட்டம் இருக்கும் கேளம்பாக்கம் பகுதியில் ஒரு பெரிய கிரவுண்டை வாங்கிப்போட்டிருக்கும், அங்கே ஒரு மிகப் பெரிய பண்ணை வீடு கட்டி வருகிறார்.

By Staff

அஜீத்தை வைத்து ஏவி.எம். நிறுவனம் ஒரு படத்தைத் தயாரிக்கிறது. படத்தின் பெயர் திருப்பதி.

படத்தை இயக்கப் போவது திருப்பாச்சி, சிவகாசி ஆகிய ஊர் பெயரில் படங்களை இயக்கி வரும் இயக்குனர் பேரரசு தான்.

அது ஏவிஎம்மின் 60வது ஆண்டு என்பதால் பல புதிய படங்களுக்கு அந் நிறுவனம் பூஜை போடவுள்ளது. ரஜினியை வைத்துஒரு படத்தை எடுக்க முயன்று வரும் அதே நேரத்தில் அஜீத்தை வைத்து எடுக்கப் போகும் இந்தப் படம் அந் நிறுவனத்தின்167வது படமாகும்.

படத்துக்கு கதை தயாராகிவிட்டதோ இல்லையோ பேரரசுவின் வழக்கமான பார்முலாவின் படி ஊர்ப் பெயரான திருப்பதி,படத்தின் தலைப்பாக சூட்டப்பட்டுவிட்டது.

தொடர்ந்து தோல்விப் படங்களையே தந்து வரும் அஜீத் சில மாதங்களுக்கு முன்பு வரை காட்பாதர் படத்தில் ஆசினுடன் நடித்துவந்தார். ஆனால், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாருடன் மோதல், மற்றும் சில பிரச்சனைகளால் படப்பிடிப்பு முடங்கிவிட்டது.முதலில் முட்டி, முட்டி நடந்த படப்பிடிப்பு இப்போது சுத்தமாக நின்று போய்விட்டதாக சொல்கிறார்கள்.

இதனால், அந்தப் படத்தை அப்படியே அலேக் ஆக விட்டுவிட்டு பாலாவின் இயக்கத்தில் நானே கடவுள் படத்தில் நடிக்கத்தயாராகிவிட்டார் அஜீத். வழக்கமாக தனது படத்தில் நடிக்கும் ஹீரோவை உடலை மெலிய வைத்தோ, கூட்டி விட்டோஆளையே மாற்றிவிடும் பாலா, இதில் அஜீத்துக்கு இட்ட கட்டளை என்ன தெரியுமா?.

உடலைக் குறைக்க வேண்டும் என்பது தான்.

பாலாவின் கட்டளையை ஏற்று தனது ஊதிப் போன பீம்பாய் உடம்பை ஜிம்மில் கரைத்திருக்கிறார் அஜீத். கார் போட்டிகளில்பங்கேற்று ஏற்பட்ட விபத்துகளால் உடலின் உள்பகுதியில் ஏற்பட்ட காயங்களுக்கு மாத்திரைகள் உண்டு வருகிறார் அஜீத்.

ஒரு நாளைக்கு பல மாத்திரைகள் உண்டதால், அதன் பக்க விளைவாக உடல் எடை கூடியதாம். உடலைக் குறைக்க முடியாமல்திண்டாடி வந்த அஜீத், பாடல் காட்சிகளில் ஆடும்போது ஆபரேட்டர் உள்பட தியேட்டரே சிரிக்கும் நிலை ஏற்பட்டது.

ஹாண்ட்சம் பையனாக தமிழ் சினிமாவுக்கு வந்த அஜீத், தொந்தியும் தொப்பையுமாக திரையை நிறைத்து நின்றார். கதைகள்சரியில்லாத படங்களில் நடித்து எல்லாம் ஊற்றிக் கொள்ளவே, இப்போது பாலாவை பெரிதும் நம்பியிருக்கிறார்.


பாலாவின் உத்தரவுப்படி உடலை பெருமளவில் குறைத்து சிக் என்று இருக்கிறார். கடந்த இரு மாதங்களில் 14 கிலோவைகுறைத்துவிட்டாராம். இப்போது ஜிம் பாடியுடன் துடிப்புடன் காணப்படுகிறார்.

எடை குறைக்கப்பட்ட அஜீத்தை ஒரு முறை பார்வையிட்ட பாலா சூட்டிங்குக்கு ரெடி சொல்லிவிட்டாராம். இதனால் பெரும்மகிழ்ச்சியிலும் இருக்கிறார் அஜீத்.

இந் நிலையில் தான் ஏவி.எம். நிறுவனம் தனது படத்திலும் அஜீத்தை புக் செய்திருக்கிறது. தற்கொலை வரை போனதயாரிப்பாளர் காஜா மொய்தீன் தனக்கு எதிராக போட்ட குண்டால் அதிர்ந்து போய் இருந்த அஜீத் முகத்தில் இப்போது தான்மீண்டும் மகிழ்ச்சிக் களை திரும்பியிருக்கிறது.

நானே கடவுள் முடிந்தவுடன்ஸ திருப்பதி படத்தின் சூட்டிங் டிசம்பரில் தொடங்குகிறதாம். படத்தை அடுத்த ஏப்ரலில் தமிழ்ப்புத்தாண்டு அன்று ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

கொசுறு: ரஜினியின் பண்ணைத் தோட்டம் இருக்கும் கேளம்பாக்கம் பகுதியில் ஒரு பெரிய கிரவுண்டை வாங்கிப்போட்டிருக்கும், அங்கே ஒரு மிகப் பெரிய பண்ணை வீடு கட்டி வருகிறார்.

Read more about: ajith to act in avm movie
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X