»   »  தலயுடன் சேர போட்டா போட்டி

தலயுடன் சேர போட்டா போட்டி

Subscribe to Oneindia Tamil

அஜீத் நடிப்பில் ரீமேக் ஆகவுள்ள பில்லா படத்தில் அஜீத்துடன் இணைந்து நடிக்க நடிகைகள் மத்தியில் கடும்போட்டி ஏற்பட்டுள்ளதாம்.

அந்தக் காலத்தில் அமிதாப் பச்சன் இந்தியில் நடித்து வெளியான சூப்பர் ஹிட் படம் டான். அது பின்னர் ரஜினிநடிப்பில் பில்லா என மாறி, தமிழிலும் சக்கை போடு போட்டது.

அமிதாப்பின் டான் சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் ரீமேக் ஆனது. தற்போது அதைப் போலவே பில்லாவையும்ரீமேக் செய்யத் திட்டமிட்டுள்ளார் அப்படத்தைத் தயாரித்த பாலாஜி.

20 ஆண்டுகளுக்கு முன்பு வந்த பில்லாவில் ரஜினிக்கு ஜோடியாக ஸ்ரீபிரியா நடித்திருந்தார். இன்னொருநாயகியாக பிரவீணா நடித்திருந்தார்.

தற்போது அஜீத்தை வைத்து இப்படத்தை ரீமேக் செய்யவுள்ள படத்தில் ரஜினி ரோலில் அஜீத் நடிப்பது மட்டும்உறுதியாகியுள்ளது. பட்டியல் படத்தைக் கொடுத்த விஷ்ணுவர்த்தன் இப்படத்தை இயக்கவுள்ளார்.

பிரவீணா நடித்த கேரக்டரைச் செய்ய நயனதாராவை தயாரிப்பாளர் தரப்பு அணுகியுள்ளதாம். அவரும் பச்சைக்கொடி காட்டி விடுவார் என எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் ஸ்ரீபிரியா நடிக்கும் ரோலுக்குத்தான் போட்டியாம். த்ரிஷாவும், ஷ்ரியாவும் வாய்ப்பைப் பறிக்க கடும்போட்டியில் இறங்கியுள்ளனராம்.

இருவரில் தி>ஷா ஏற்கனவே அஜீத்துடன் நடித்தவர், இப்போது கிரீடம் படத்திலும் நடித்து வருகிறார். எனவேமறுபடியும் அஜீத்துக்கு அவர் ஜோடியாவாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. அதேசமயம், ஷ்ரியாவுக்குவாய்ப்பு பிரகாசமாக உள்ளதாம்.

அதேசமயம், தாமிரபரணி நாயகி பானுவும், ரீமா சென்னும் கூட போட்டியில் இருப்பதாக கேள்வி. த்ரிஷாவும்,ஷ்ரியாவும் சம்பளத்தை ஜாஸ்தியாக கேட்டால் இருவருக்கும் கல்தா கொடுத்து விட்டு ரீமாவையோ அல்லதுபானுவையோ புக் பண்ணக் கூடிய வாய்ப்புகளும் இருக்கிறதாம்.

யார் நடித்தாலும் ரஜினி, ரஜினிதான், ஸ்ரீபிரியா, ஸ்ரீபிரியாதான். அந்தக் கட்டுக்கும், செட்டுக்கும் இணை வருமா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil