»   »  அஜீத்துக்கு அடி மேல் அடி

அஜீத்துக்கு அடி மேல் அடி

Subscribe to Oneindia Tamil

சர்ச்சைக் கடலில் சிக்கித் தவிக்கும் அஜீத், மறுபடியும் ஏற்பட்டுள்ள முதுகுவலியால், முன்பு போல ஆக்ஷனில்ஆக்ரோஷமாக நடிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சினிமாப் பின்னணி எதுவும் இல்லாதவர் அஜீத். சுயமாக, சொந்தக் கையால் கரணம் அடித்து முன்னுக்கு வந்தவர்.சினிமாக்காரர்களுக்கும், அஜீத்துக்கும் ஆரம்பத்திலிருந்தே நல்ல நெருக்கம் இருந்ததில்லை.

பை சான்ஸாக சினிமாவுக்கு வந்தவர் அஜீத். வந்த பிறகு தனது சுய திறமையால் வேகமாக முன்னேறிய அஜீத்,ஆசை படத்திற்குப் பிறகு ஸ்டார் நடிகரானார். வாலி அவரை முன்னணி ஸ்டார் ரேஞ்சுக்கு உயர்த்தியது.

அஜீத் சமீப ஆண்டுகளாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தார். பிரச்சினைகள் அவரைச் சுற்றிச் ற்றிகும்மியடித்தன. அவரது வாய்தான் அவருக்கு முதல் வில்லன். படபடவென்று, வெளிப்படையாக அவர் பேசியசில பேச்சுக்கள் அவருக்கு எதி>யாகி விட்டன.

இதனால் அவரது திரையுலக வாழ்க்கையும் பலநேரங்களில் பாதிக்கப்பட்டது. மேலும் அஜீத்தை சிலஹீரோக்களும், டைரக்டர்களும் தங்களது படங்களில் வசனம் மூலம் வசை பாட ஆரம்பித்தனர். டீஸ் பண்ணஆரம்பித்தனர்.

ஆனால் இவர்கள் எல்லாம் அஜீத்தைப் போல கஷ்டப்பட்டு சினிமாவுக்கு வராமல், பின்பக்க கதவு வழியாகவசதியாக வந்து குந்தியவர்கள். இப்போதுள்ள 95 சதவீத இளம் ஹீரோக்கள், ஏற்கனவே உள்ள திரையுலகபிரபலங்களின் வாரிசுகள்தான்.

இவர்களின் அப்பாக்களோ அல்லது அம்மாக்களோ அல்லது உறவினர்களோ திரையுலகில் பெயர்பெற்றவர்களாக இருக்கிறார்கள். இதனால் அவர்களின் பெயரையே முதலீடாகப் பாட்டு இந்த இளம்ஹீரோக்கள் நடிகர்களாகி விட்டார்கள்.

நடிக்கிறார்களோ இல்லையோ பந்தா பண்ணுவதில் இவர்கள்தான் இப்போது லீடிங் ஸ்டார்கள். உதாரணம்,சிலம்பரசன்.

இவர்களை எல்லாம் மீறி எந்தப் புது நடிகரும் முன்னேறி வந்து விட முடியாது. நடிகைகள் மட்டுமே இவர்களைத்தாண்டி உயர முடியும். காரணத்தைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

மறுபடியும் அஜீத்துக்கு வருவோம். பவித்ரா படத்தில் நடித்தபோது மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கினார்அஜீத். அப்போது அவரது முதுகெலும்பில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அந்த பிரச்சினை சரியாகவேநீண்ட நாட்களாயின.

அதிலிருந்து முழுமையாக குணமடைவதற்குள்ளாகவே தினசரி 25 மாத்திரைகள் வரை சாப்பிட்டுக் கொண்டேதொடர்ந்து நடித்து வந்தார் அஜீத்.

கடந்த தீபாவளிக்கு வெளியான வரலாறு பெரும் வெற்றி பெற்றது. ஆனால் பொங்கலுக்கு வந்த ஆழ்வார்,கவிழ்த்து விட்டு விட்டது. இதனால் தற்போது நடித்து வரும் கிரீடம் படத்தை பெரிதும் நம்பியுள்ளார் அஜீத்.

விசாகப்பட்டனத்தில் நடந்து வரும் படப்பிடிப்பில் படு கவனமாக நடித்து வரும் அஜீத், சண்டைக் காட்சிஒன்றில், டூப் போட மறுத்து ரிஸ்க் எடுத்து நடிக்கப் போக மறுபடியும் அடிபட்டு முதுகு வலி வந்து விட்டது

வலியால் கதறித் துடித்த அஜீத்தைப் பார்த்து யூனிட்டே பயந்து போய் விட்டது. உடனடியாக சென்னைக்குக்கொண்டு வரப்பட்ட அஜீத், 2 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை தரப்பட்டார். பின்னர் மீண்டும்படப்பிடிப்புக்காக விசாகப்பட்டனம் சென்றார். மறுபடியும் வலி வரவே, படப்பிடிப்பு ரத்தாகி, மீண்டும்சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கோலிவுட்டில் இப்போது அனைவரிடமும் நிலவும் ஒரே கேள்வி, அஜீத் மீண்டும் முன்பு போல ஆக்ஷன்காட்சிகளில் நடிக்க முடியுமா என்பதுதான்.

அஜீத்தின் மனைவி ஷாலினியிடம் கேட்டபோது, அஜீத்துக்கு தன்னம்பிக்கை நிறைய. எனவே அவர் மீண்டும்பழையபடியே நடிக்க வருவார் என்றார் உறுதியாக.

அஜீத்துக்கு இப்போது பிசியோதெரபி கொடுக்கப்பட்டு வருகிறதாம். வீட்டிலேயே இருந்தபடி சிகிச்சையும்எடுத்து வருகிறார்.

எந்திருச்சு வா தல

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil