»   »  மீண்டும் ஷூட்டிங்கில் அஜீத்!

மீண்டும் ஷூட்டிங்கில் அஜீத்!

Subscribe to Oneindia Tamil

முதுகுவலியால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்துக் கொண்டு, ஓய்வில் இருந்து வந்த அஜீத் மீண்டும்ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார்.

இளம் வயதில் மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்ததில் அஜீத்தின் முதுகுத் தண்டு பாதிக்கப்பட்டது.அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அவர் குணமடைந்தாலும் இப்போதும் கூட அடிக்கடி முதுகு வலி வந்துஅவதிப்பட்டு வருகிறார்.

முதுகுவலியைப் போக்க ஏகப்பட்ட மருந்து, மாத்திரைகளை உட்கொண்டுதான் அவர் படங்களில் நடித்துவருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் விசாகப்பட்டனத்தில் கிரீடம் பட ஷூட்டிங்கில் கலந்து கொண்டுநடித்தபோது கடுமையான முதுகுவலி ஏற்பட்டு துடித்தார் அஜீத்.

உடனடியாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட்டார் அஜீத். அப்பல்லோமருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அஜீத், பின்னர் வீட்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு ஓய்வில் இருந்து வந்தஅஜீத் இப்போது குணமடைந்துள்ளார்.

இதையடுத்து மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். திரிஷா, ராஜ்கிரண், சரண்யா, அஜீத் ஆகியோர்சம்பந்தப்பட்ட காட்சிகளை தற்போது படமாக்கி வருகின்றனர்.

முதுகுவலி சுத்தமாக இல்லை என்று உறுதியான நிலைக்கு வந்த பின்னர் மிச்சமுள்ள சண்டைக் காட்சிகளைபடமாக்க உள்ளனராம்.

பார்த்து தல!

Read more about: ajith is back in shooting
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil