வீடு திரும்பினார் அஜீத்!

By Staff

மஞ்சள் காமாலை மற்றும் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் அஜீத், குணமடைந்து வீடு திரும்பினார். கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள தனது பண்ணை இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார்.

பில்லா படத்தின் ஷூட்டிங்குக்காக அஜீத் மலேசியா சென்றிருந்தார். தொடர்ந்து இரவு பகலாக படப்பிடிப்பில் கலந்து கொண்டு அவர் நடித்து வந்ததால் அவருக்கு மஞ்சள் காமாலை மற்றும் டைபாய்டு காய்ச்சல் வந்தது.

இதையடுத்து அவர் சென்னைக்குத் திரும்பினார். வட பழனியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என அவரை டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதனால் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்தார் அஜீத்.

இந்த நிலையில் அவரது உடல் நிலையில் நேற்று நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

வீடு திரும்பி விட்டாலும் கூட ஒரு மாதத்திற்கு முழுமையான ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் வலியுறுத்தியுள்ளனர். எனவே கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ளது தனது பண்ணை வீட்டுக்குச் சென்று அஜீத் ஓய்வில் இருந்து வருகிறார்.

பில்லா படத்தில் அஜீத் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது. அஜீத் முழுமையாக குணமடைந்ததும் இந்தக் காட்சிகள் படமாக்கப்படுமாம்.

http://www.rajinifans.com/

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X