»   »  அஜீத்திற்கு ரெட் ரெட் படத்தில் ரெட்டாக நடித்த அஜீத்துக்கு ரெட் கார்ட் போட்டுள்ளனர் தயாரிப்பாளர் சங்கத்தினர்.அஜீத்தின் அன்புக்குரிய நண்பராக திகழ்ந்தவர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி. நகமும், சதையுமாக இருந்த இவர்களுக்குள் சமீபத்தில்பிரிவு ஏற்பட்டு விட்டது. சக்கரவர்த்தியே அஜீத்தின் பினாமி தான் என்று பேசப்பட்டதுண்டு.ஆனால், கணக்கு வழக்கில் சக்கரவர்த்தி மீது அஜீத்துக்கு சில சந்தேகங்கள் எழ, அதுவே பிரிவுக்கு வழி வகுத்துவிட்டதுஎன்கிறார்கள். இதனால் இனிமேல் நிக் தயாரிக்கும் படங்களில் நடிக்க மாட்டேன் என்று அஜீத் பகிரங்கமாகவேஅறிவித்துவிட்டார்.இந் நிலையில்தான் அஜீத்திற்கு கிடுக்கிப் பிடி போட்டார் சக்கரவர்த்தி. தனக்கு அஜீத் நிறையப் பணம் தர வேண்டியுள்ளது. அதைஅவர் கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கவுன்சிலில் முறையிட்டுள்ளார். இதை விசாரித்த தயாரிப்பாளர் கவுன்சில், பணத்தை கொடுக்குமாறு அஜீத்தைக் கேட்டுக் கொண்டது.ஆனால், எனக்குத் தான் நிக் சக்கரவர்த்தி பணம் கொடுக்க வேண்டும். வேண்டுமானால் அவருக்காக ஒரு படம் செய்து தருகிறேன்.ஆனால் 60 நாட்களுக்குள் படத்தை முடித்து விட வேண்டும். அதற்கு மேல் ஆகும் நாட்களுக்கு ஒரு நாளைக்கு ரூ. 4 லட்சம்சம்பளமாக தர வேண்டும் என்று நிபந்தனை போட்டார்.நிபந்தனையை ஏற்றுக் கொண்ட சக்கரவர்த்தி, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் காட் பாதர் படத்தை ஆரம்பித்தார். ஆனால் பணப்பிரச்சினை காரணமாக முக்கால்வாசிப் படத்திற்கு மேல் வளராமல் நின்று போய் விட்டது காட்பாதர்.மேலும், அஜீத் போட்ட 60 நாள் நிபந்தனையும் முடிந்து விட்டது. இதையடுத்த தனது அடுத்த வேலையை பார்க்கப் போய்விட்டார் அஜீத். பாலாவின் இயக்கத்தில் நடிக்கப் போகும் நான் கடவுள் (பழைய டைட்டில்: நானே கடவுள்) படத்திற்காகநீண்ட தலைமுடி, தாடி வளர்க்க ஆரம்பித்து விட்டார்.இதனால் அதிர்ச்சி அடைந்த சக்கரவர்த்தி, தயாரிப்பாளர் கவுன்சிலை அணுகினார். தனது படத்தை முடிக்காமல், வேறு படத்தில்அஜீத் நடிக்கக் கூடாது. அவர் கேட்கும் பணத்தை நான் தருகிறேன் என்றும் கூறியுள்ளார்.இதையடுத்து காட்பாதர் படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படத்தில் நடிக்கக் கூடாது என்று அஜீத்திற்கு தயாரிப்பாளர்கவுன்சில் ரெட் கார்டு போட்டு விட்டதாம்.இதனால் அஜீத் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. காட்பாதர் படத்தை முடித்துக் கொடுக்க அஜீத் தயாராக இருந்தும், சக்கரவர்த்திவேண்டுமென்றே அதை தாமதப்படுத்தியதாகவும், பணப் பிரச்சினை என்ற பொய்யான காரணத்தை அவர் கூறி வருவதாகவும்,தனது படம் எதுவும் தற்போதைக்கு வரக் கூடாது என்று அவர் சதி செய்வதாகவும் அஜீத் தரப்பு புலம்புகிறது.காட்பாதர் படம் இழுத்தடிப்புக்கு உள்ளாகிவிட்டதால், தெலுங்கில் தன்னைத் தேடி வந்த படமொன்றில் நடிக்கப் போய்விட்டார்ஹீரோயின் ஆசின். அந்தப் படத்தை முடித்துக் கொடுத்த பின்தான் காட்பாதருக்கு மீண்டும் வர முடியும் என்று கூறிவிட்டாராம்.ஆனால், மோதிப் பார்க்கத் தயாராகிவிட்ட அஜீத், நானே கடவுள் படத்தில் இன்வால்வ் ஆக ஆரம்பித்துவிட்டார். பாலாவுடன் படவிவாதத்தில் தீவிரமாக இறங்கிவிட்டார்.இந்தப் படத்தின் சூட்டிங்கை மதுரைப் பக்கம் நடத்த இருக்கிறார் பாலா.

அஜீத்திற்கு ரெட் ரெட் படத்தில் ரெட்டாக நடித்த அஜீத்துக்கு ரெட் கார்ட் போட்டுள்ளனர் தயாரிப்பாளர் சங்கத்தினர்.அஜீத்தின் அன்புக்குரிய நண்பராக திகழ்ந்தவர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி. நகமும், சதையுமாக இருந்த இவர்களுக்குள் சமீபத்தில்பிரிவு ஏற்பட்டு விட்டது. சக்கரவர்த்தியே அஜீத்தின் பினாமி தான் என்று பேசப்பட்டதுண்டு.ஆனால், கணக்கு வழக்கில் சக்கரவர்த்தி மீது அஜீத்துக்கு சில சந்தேகங்கள் எழ, அதுவே பிரிவுக்கு வழி வகுத்துவிட்டதுஎன்கிறார்கள். இதனால் இனிமேல் நிக் தயாரிக்கும் படங்களில் நடிக்க மாட்டேன் என்று அஜீத் பகிரங்கமாகவேஅறிவித்துவிட்டார்.இந் நிலையில்தான் அஜீத்திற்கு கிடுக்கிப் பிடி போட்டார் சக்கரவர்த்தி. தனக்கு அஜீத் நிறையப் பணம் தர வேண்டியுள்ளது. அதைஅவர் கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கவுன்சிலில் முறையிட்டுள்ளார். இதை விசாரித்த தயாரிப்பாளர் கவுன்சில், பணத்தை கொடுக்குமாறு அஜீத்தைக் கேட்டுக் கொண்டது.ஆனால், எனக்குத் தான் நிக் சக்கரவர்த்தி பணம் கொடுக்க வேண்டும். வேண்டுமானால் அவருக்காக ஒரு படம் செய்து தருகிறேன்.ஆனால் 60 நாட்களுக்குள் படத்தை முடித்து விட வேண்டும். அதற்கு மேல் ஆகும் நாட்களுக்கு ஒரு நாளைக்கு ரூ. 4 லட்சம்சம்பளமாக தர வேண்டும் என்று நிபந்தனை போட்டார்.நிபந்தனையை ஏற்றுக் கொண்ட சக்கரவர்த்தி, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் காட் பாதர் படத்தை ஆரம்பித்தார். ஆனால் பணப்பிரச்சினை காரணமாக முக்கால்வாசிப் படத்திற்கு மேல் வளராமல் நின்று போய் விட்டது காட்பாதர்.மேலும், அஜீத் போட்ட 60 நாள் நிபந்தனையும் முடிந்து விட்டது. இதையடுத்த தனது அடுத்த வேலையை பார்க்கப் போய்விட்டார் அஜீத். பாலாவின் இயக்கத்தில் நடிக்கப் போகும் நான் கடவுள் (பழைய டைட்டில்: நானே கடவுள்) படத்திற்காகநீண்ட தலைமுடி, தாடி வளர்க்க ஆரம்பித்து விட்டார்.இதனால் அதிர்ச்சி அடைந்த சக்கரவர்த்தி, தயாரிப்பாளர் கவுன்சிலை அணுகினார். தனது படத்தை முடிக்காமல், வேறு படத்தில்அஜீத் நடிக்கக் கூடாது. அவர் கேட்கும் பணத்தை நான் தருகிறேன் என்றும் கூறியுள்ளார்.இதையடுத்து காட்பாதர் படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படத்தில் நடிக்கக் கூடாது என்று அஜீத்திற்கு தயாரிப்பாளர்கவுன்சில் ரெட் கார்டு போட்டு விட்டதாம்.இதனால் அஜீத் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. காட்பாதர் படத்தை முடித்துக் கொடுக்க அஜீத் தயாராக இருந்தும், சக்கரவர்த்திவேண்டுமென்றே அதை தாமதப்படுத்தியதாகவும், பணப் பிரச்சினை என்ற பொய்யான காரணத்தை அவர் கூறி வருவதாகவும்,தனது படம் எதுவும் தற்போதைக்கு வரக் கூடாது என்று அவர் சதி செய்வதாகவும் அஜீத் தரப்பு புலம்புகிறது.காட்பாதர் படம் இழுத்தடிப்புக்கு உள்ளாகிவிட்டதால், தெலுங்கில் தன்னைத் தேடி வந்த படமொன்றில் நடிக்கப் போய்விட்டார்ஹீரோயின் ஆசின். அந்தப் படத்தை முடித்துக் கொடுத்த பின்தான் காட்பாதருக்கு மீண்டும் வர முடியும் என்று கூறிவிட்டாராம்.ஆனால், மோதிப் பார்க்கத் தயாராகிவிட்ட அஜீத், நானே கடவுள் படத்தில் இன்வால்வ் ஆக ஆரம்பித்துவிட்டார். பாலாவுடன் படவிவாதத்தில் தீவிரமாக இறங்கிவிட்டார்.இந்தப் படத்தின் சூட்டிங்கை மதுரைப் பக்கம் நடத்த இருக்கிறார் பாலா.

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரெட் படத்தில் ரெட்டாக நடித்த அஜீத்துக்கு ரெட் கார்ட் போட்டுள்ளனர் தயாரிப்பாளர் சங்கத்தினர்.அஜீத்தின் அன்புக்குரிய நண்பராக திகழ்ந்தவர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி. நகமும், சதையுமாக இருந்த இவர்களுக்குள் சமீபத்தில்பிரிவு ஏற்பட்டு விட்டது. சக்கரவர்த்தியே அஜீத்தின் பினாமி தான் என்று பேசப்பட்டதுண்டு.

ஆனால், கணக்கு வழக்கில் சக்கரவர்த்தி மீது அஜீத்துக்கு சில சந்தேகங்கள் எழ, அதுவே பிரிவுக்கு வழி வகுத்துவிட்டதுஎன்கிறார்கள். இதனால் இனிமேல் நிக் தயாரிக்கும் படங்களில் நடிக்க மாட்டேன் என்று அஜீத் பகிரங்கமாகவேஅறிவித்துவிட்டார்.

இந் நிலையில்தான் அஜீத்திற்கு கிடுக்கிப் பிடி போட்டார் சக்கரவர்த்தி. தனக்கு அஜீத் நிறையப் பணம் தர வேண்டியுள்ளது. அதைஅவர் கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கவுன்சிலில் முறையிட்டுள்ளார்.

இதை விசாரித்த தயாரிப்பாளர் கவுன்சில், பணத்தை கொடுக்குமாறு அஜீத்தைக் கேட்டுக் கொண்டது.

ஆனால், எனக்குத் தான் நிக் சக்கரவர்த்தி பணம் கொடுக்க வேண்டும். வேண்டுமானால் அவருக்காக ஒரு படம் செய்து தருகிறேன்.ஆனால் 60 நாட்களுக்குள் படத்தை முடித்து விட வேண்டும். அதற்கு மேல் ஆகும் நாட்களுக்கு ஒரு நாளைக்கு ரூ. 4 லட்சம்சம்பளமாக தர வேண்டும் என்று நிபந்தனை போட்டார்.

நிபந்தனையை ஏற்றுக் கொண்ட சக்கரவர்த்தி, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் காட் பாதர் படத்தை ஆரம்பித்தார். ஆனால் பணப்பிரச்சினை காரணமாக முக்கால்வாசிப் படத்திற்கு மேல் வளராமல் நின்று போய் விட்டது காட்பாதர்.

மேலும், அஜீத் போட்ட 60 நாள் நிபந்தனையும் முடிந்து விட்டது. இதையடுத்த தனது அடுத்த வேலையை பார்க்கப் போய்விட்டார் அஜீத். பாலாவின் இயக்கத்தில் நடிக்கப் போகும் நான் கடவுள் (பழைய டைட்டில்: நானே கடவுள்) படத்திற்காகநீண்ட தலைமுடி, தாடி வளர்க்க ஆரம்பித்து விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சக்கரவர்த்தி, தயாரிப்பாளர் கவுன்சிலை அணுகினார். தனது படத்தை முடிக்காமல், வேறு படத்தில்அஜீத் நடிக்கக் கூடாது. அவர் கேட்கும் பணத்தை நான் தருகிறேன் என்றும் கூறியுள்ளார்.

இதையடுத்து காட்பாதர் படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படத்தில் நடிக்கக் கூடாது என்று அஜீத்திற்கு தயாரிப்பாளர்கவுன்சில் ரெட் கார்டு போட்டு விட்டதாம்.

இதனால் அஜீத் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. காட்பாதர் படத்தை முடித்துக் கொடுக்க அஜீத் தயாராக இருந்தும், சக்கரவர்த்திவேண்டுமென்றே அதை தாமதப்படுத்தியதாகவும், பணப் பிரச்சினை என்ற பொய்யான காரணத்தை அவர் கூறி வருவதாகவும்,தனது படம் எதுவும் தற்போதைக்கு வரக் கூடாது என்று அவர் சதி செய்வதாகவும் அஜீத் தரப்பு புலம்புகிறது.

காட்பாதர் படம் இழுத்தடிப்புக்கு உள்ளாகிவிட்டதால், தெலுங்கில் தன்னைத் தேடி வந்த படமொன்றில் நடிக்கப் போய்விட்டார்ஹீரோயின் ஆசின். அந்தப் படத்தை முடித்துக் கொடுத்த பின்தான் காட்பாதருக்கு மீண்டும் வர முடியும் என்று கூறிவிட்டாராம்.

ஆனால், மோதிப் பார்க்கத் தயாராகிவிட்ட அஜீத், நானே கடவுள் படத்தில் இன்வால்வ் ஆக ஆரம்பித்துவிட்டார். பாலாவுடன் படவிவாதத்தில் தீவிரமாக இறங்கிவிட்டார்.

இந்தப் படத்தின் சூட்டிங்கை மதுரைப் பக்கம் நடத்த இருக்கிறார் பாலா.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil