அஜீத்தின் சவால் தேவைப்பட்ட நேரத்தில் ஆணித்தரமான வெற்றி கிடைத்துள்ளதால் பைக் பார்ட்டி அஜீத் படு சந்தோஷமாகியுள்ளார். காதல் கோட்டை, வாலி ஆகியவை கொடுத்த மிகப் பெரிய வெற்றியால் உச்சத்திற்குப் போனார் அஜீத். அப்போது விஜய்க்கு நேரம் சரியில்லாமல் இருந்தது. தேறி வர அவர் தடுமாறிக் கொண்டிருந்த நிலையில் அஜீத் அட்டகாசம் செய்து வந்தார். அந்த நேரம் பார்த்து குஷி மூலம் மீண்டும் விஜய்க்கு பிரேக் கிடைக்க, ஆனால் சிட்டிசன் அஜீத்தை வாரி விட்டது. சிட்டிசன் கொடுத்த அடியால் துவண்டு போன அஜீத். விடாப்பிடியாக, தனக்கு ஒத்துவராத படங்களை தொடர்ந்து செய்து படு பாதாளத்திற்குப் போய் விட்டார். மறுபக்கம் விஜய் விஸ்வரூபம் எடுத்து ரஜினியின் அடுத்த வாரிசு என்ற அந்தஸ்துக்குப் போய் விட்டார். ஆனால் அஜீத்தால் எழுந்திருக்கவே முடியாமல் போய்விட்டது. அவர் சுதாரிப்பதற்குள் விக்ரம், சூர்யா என ஏகப்பட்ட பேர் வரிந்து கட்டிக் கொண்டு வளர்ந்து விட்டனர். இது போதாதென்று, விஜய் வேறு தனது படங்களில் எல்லாம் அஜீத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் குத்திக், குடைந்து வசனம் வைத்ததால், சோர்ந்து போனார் அஜீத். கடுப்பாகிப் போய், மோட்டார் பந்தயங்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தார். இப்படியேப் போய்க் கொண்டிருந்தால் விட்ட இடத்தைப் பிடிக்க முடியாது, மீண்டும் தீவிரமாக கவனம் செலுத்துங்கள், பேச்சைக் குறையுங்கள், உங்களை விட உங்களது படங்கள்தான் அதிகம் பேச வேண்டும் என்று மனைவி உள்ளிட்ட நெருக்கமானவர்கள் கொடுத்த அட்வைஸால் மீண்டும் கோலிவுட்டில் தீவிர கவனம் செலுத்தினார் அஜீத். முன்பை விட பக்குவப்பட்ட மனதுடன், ஸ்லிம் ஆன உடம்புடன் உத்வேகத்துடன் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார் அஜீத். பரமசிவன், அஜீத்துக்கு பெரிய பிரேக்கைக் கொடுத்துள்ளது. அவ்வளவுதான் என கணிக்கப்பட்ட அஜீத் மீண்டும் புது அவதாரம் எடுத்துள்ளார். ஆரம்பத்தில் சுமாராகவே போன பரசிவன், பின்னர் பிக்-அப் ஆகி பொங்கலுக்கு வெளியான படங்களிலேயே பரமசிவன்தான் பெரிய வெற்றி என்று இண்டஸ்ட்ரியில் சந்தோஷமாக கூறுகிறார்கள். அதேசமயம், யாரும் எதிர்பாராத வகையில் ஆதிக்கு பெரிய அடி கிடைத்துள்ளது. பரமசிவன் வெற்றியால் சந்தோஷமடைந்துள்ள அஜீத், அதுகுறித்து வெளிப்படையாக எதையும் கூற மறுத்து வருகிறார். மீறிக் கேட்டால், இனிமேல் நான் பேச மாட்டேன், எனது படங்கள்தான் பேசும் என்று டயலாக் விடுகிறார். இப்போது அஜீத் கைவசம் நிறையப் படங்கள். ஏவி.எம்.மின் திருப்பதி, கே.எஸ்.ரவிக்குமாரின் காட்ஃபாதர், பாலாவின் நான் கடவுள் என ஆள் இப்போ படு பிசி. இத்தோடு மேலும் ஒரு படத்திலும் புக் ஆகியுள்ளார். அறிந்தும் அறியாமலும் பட இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இயக்கப் போகும் அப்படத்திற்கு சவால் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த சவால் விஜய்க்கா என்பது தெரியவில்லை (இருவரும் கொஞ்ச காலம் முன் சமாதானமாகிவிட்டது நினைவுறத்தக்கது)

By Staff

தேவைப்பட்ட நேரத்தில் ஆணித்தரமான வெற்றி கிடைத்துள்ளதால் பைக் பார்ட்டி அஜீத் படு சந்தோஷமாகியுள்ளார்.

காதல் கோட்டை, வாலி ஆகியவை கொடுத்த மிகப் பெரிய வெற்றியால் உச்சத்திற்குப் போனார் அஜீத். அப்போது விஜய்க்கு நேரம் சரியில்லாமல் இருந்தது. தேறி வர அவர் தடுமாறிக் கொண்டிருந்த நிலையில் அஜீத் அட்டகாசம் செய்து வந்தார்.

அந்த நேரம் பார்த்து குஷி மூலம் மீண்டும் விஜய்க்கு பிரேக் கிடைக்க, ஆனால் சிட்டிசன் அஜீத்தை வாரி விட்டது.

சிட்டிசன் கொடுத்த அடியால் துவண்டு போன அஜீத். விடாப்பிடியாக, தனக்கு ஒத்துவராத படங்களை தொடர்ந்து செய்து படு பாதாளத்திற்குப் போய் விட்டார்.


மறுபக்கம் விஜய் விஸ்வரூபம் எடுத்து ரஜினியின் அடுத்த வாரிசு என்ற அந்தஸ்துக்குப் போய் விட்டார். ஆனால் அஜீத்தால் எழுந்திருக்கவே முடியாமல் போய்விட்டது.

அவர் சுதாரிப்பதற்குள் விக்ரம், சூர்யா என ஏகப்பட்ட பேர் வரிந்து கட்டிக் கொண்டு வளர்ந்து விட்டனர். இது போதாதென்று, விஜய் வேறு தனது படங்களில் எல்லாம் அஜீத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் குத்திக், குடைந்து வசனம் வைத்ததால், சோர்ந்து போனார் அஜீத்.

கடுப்பாகிப் போய், மோட்டார் பந்தயங்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தார்.

இப்படியேப் போய்க் கொண்டிருந்தால் விட்ட இடத்தைப் பிடிக்க முடியாது, மீண்டும் தீவிரமாக கவனம் செலுத்துங்கள், பேச்சைக் குறையுங்கள், உங்களை விட உங்களது படங்கள்தான் அதிகம் பேச வேண்டும் என்று மனைவி உள்ளிட்ட நெருக்கமானவர்கள் கொடுத்த அட்வைஸால் மீண்டும் கோலிவுட்டில் தீவிர கவனம் செலுத்தினார் அஜீத்.


முன்பை விட பக்குவப்பட்ட மனதுடன், ஸ்லிம் ஆன உடம்புடன் உத்வேகத்துடன் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார் அஜீத். பரமசிவன், அஜீத்துக்கு பெரிய பிரேக்கைக் கொடுத்துள்ளது.

அவ்வளவுதான் என கணிக்கப்பட்ட அஜீத் மீண்டும் புது அவதாரம் எடுத்துள்ளார்.

ஆரம்பத்தில் சுமாராகவே போன பரசிவன், பின்னர் பிக்-அப் ஆகி பொங்கலுக்கு வெளியான படங்களிலேயே பரமசிவன்தான் பெரிய வெற்றி என்று இண்டஸ்ட்ரியில் சந்தோஷமாக கூறுகிறார்கள்.

அதேசமயம், யாரும் எதிர்பாராத வகையில் ஆதிக்கு பெரிய அடி கிடைத்துள்ளது. பரமசிவன் வெற்றியால் சந்தோஷமடைந்துள்ள அஜீத், அதுகுறித்து வெளிப்படையாக எதையும் கூற மறுத்து வருகிறார்.


மீறிக் கேட்டால், இனிமேல் நான் பேச மாட்டேன், எனது படங்கள்தான் பேசும் என்று டயலாக் விடுகிறார். இப்போது அஜீத் கைவசம் நிறையப் படங்கள். ஏவி.எம்.மின் திருப்பதி, கே.எஸ்.ரவிக்குமாரின் காட்ஃபாதர், பாலாவின் நான் கடவுள் என ஆள் இப்போ படு பிசி.

இத்தோடு மேலும் ஒரு படத்திலும் புக் ஆகியுள்ளார். அறிந்தும் அறியாமலும் பட இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இயக்கப் போகும் அப்படத்திற்கு சவால் என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்த சவால் விஜய்க்கா என்பது தெரியவில்லை (இருவரும் கொஞ்ச காலம் முன் சமாதானமாகிவிட்டது நினைவுறத்தக்கது)

Read more about: ajiths new film saval
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X