ஹீரோ .. ஹீரோ ..

By Staff

விஜய்காந்தும் இயக்குனர் பாலாவும் விரைவில் கைகோர்க்க உள்ளனர்.

சிட்டி போலீஸ் கமிஷ்னர், கிராமத்து கேரக்டர், வனத்துறை அதிகாரி, கலெக்டர், சிபிஐ ஆபிசர், மீண்டும் சிட்டி கமிஷ்னர், கிராமத்து கேரக்டர்என்று வட்டம் போட்டுக் கொண்டிருக்கும் விஜய்காந்த் எப்போதாவது ரமணா போன்ற வித்தியாசமான கேரக்டர்களையும் செய்து வந்தார்.

சமீபத்தில் அவர் சொந்தமாக எடுத்த, ஆள் வைத்து எடுத்த படங்கள் எல்லாம் வரிசையாக படுக்க ஆரம்பித்துவிட்டன. நடிகர் சங்கபஞ்சாயத்தைவிட இந்த டென்சன் விஜய்காந்தின் கண்களை மேலும் சிவக்க வைத்துவிட்டது.

அரசியல் ஆசையை மனதில் வைத்திருக்கும் கேப்டனை படங்களின் தொடர் தோல்வி ரொம்பவே அப்செட் செய்துவிட்டனவாம்.

இதனால் என்ன செய்வது என்று ரொம்பவே யோசித்துக் கொண்டிருந்த விஜய்காந்த்தை அவரது ஊர்க்காரரான இயக்குனர் பாலாசமீபத்தில் சந்தித்துள்ளார்.

அப்போது நாம் இரண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் செஞ்சா என்று பாலா கேட்க, விஜயகாந்த் ஒரு நிமிடம் அதிர்ந்து பின்னர் தலையைஆட்டினாராம். (அப்படியே கண்களை மூடி... பிதாமகன் விக்ரம் கேரக்டரில் விஜய்காந்த் நடித்தால் எப்படி இருக்கும் என்று கொஞ்சம்யோசித்துப் பாருங்கள்!!)

தற்போது ரோஜா கம்பைன்ஸ் நிறுவனத்தின் சார்பில் காஜா மைதீன் தயாரிக்கும் பேரரசு படத்தில் நடித்து வரும் விஜயகாந்த், இந்தப் படத்தைஹிட்டாக்குவதில் படு தீவிரமாக இருக்கிறார். படத்தில் விஜயகாந்துக்கு வழக்கம்போல் சிபிஐ அதிகாரி வேடம் தான்.

இந் நிலையில் தான் இயக்குனர் பாலா விஜய்காந்தை சந்தித்து, அவர் தயாரிக்கும் மாயாவி படத்தில் ஒரு சின்ன ரோலில் நடிக்குமாறுகேட்டுள்ளார். கதைப்படி டூரிஸ்ட் கைடாக இருக்கும் சூர்யாவிடம், சில வெளிநாட்டவர்கள் சூட்டிங் பார்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

அவர்களை சூர்யா, விஜய்காந்தின் சூட்டிங்கிற்குக் கூட்டி வருகிறார். விஜய்காந்துடன் அந்த வெளிநாட்டினர் போட்டோ எடுத்துக்கொள்கிறார்கள்.

இது தான் விஜய்காந்த் செய்யப் போகும் ரோல். இந்த ரோலைச் செய்ய விஜய்காந்த் ஒப்புக் கொண்டுவிட்டாராம்.

இதையடுத்து தனது இயக்கத்தில் விஜய்காந்த் ஒரு படத்தில் நடிப்பது குறித்தும் பேசியிருக்கிறார் பாலா. சத்ரியன் மாதிரி ஒரு கதைகிடைத்தால், ரெண்டு பேரும் சேர்ந்து பண்ணலாம் என்று பதில் தந்திருக்கிறார் விஜயகாந்த்.

இதையடுத்து கதையை யோசிக்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார் பாலா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X