ஹீரோ .. ஹீரோ ..

By Staff

காட்பாதர் படத்தில் அஜீத் 3 வேடங்களில் நடிப்பது பழைய விஷயம். மூன்று அஜீத்தில் ஒரு வேடம் அரவாணி என்பது புதியவிஷயம்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஜக்குபாய் என்ற படத்தில் நடிக்க ரஜினி திட்டமிட்டிருந்தார். படம் குறித்து அறிவிப்புவெளியான நிலையில், அதை அப்படியே கிடப்பில் போட்டு விட்ட ரஜினி, பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி படத்தில் தற்போதுநடித்து வருகிறார்.

சந்திரமுகி தமிழ் புத்தாண்டிற்கு ரிலீஸ் ஆகிறது. தன்னிடம் ஒரு வார்த்தை கூட கூறாமல் சந்திரமுகி படத்தை ரஜினி ஆரம்பித்ததுகுறித்து வருத்தத்தில் இருக்கும் கே.எஸ்.ரவிக்குமார், அதற்குப் போட்டியாக காட்பாதர் படத்தை தமிழ்ப் புத்தாண்டு தினத்தில்ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருக்கிறார்.


அஜீத் 3 வேடங்களில் நடிக்கும் காட்பாதர் தமிழ்ப் புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆகும் வகையில் படுவேகமாகத் தயாரிக்கப்பட்டுவருகிறது.

இதில் அஜீத்தின் வேடங்கள் குறித்து புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. தந்தை மற்றும் 2 மகன்களாக அஜீத் 3 வேடங்களில்நடிக்கிறார்.

இதில் தந்தையாக வரும் அஜீத் நடன இயக்குநர் ஆவார் (டான்ஸ் ஆடவே வராத அஜீத்துக்கு நடன இயக்குநர் வேடமா, பலே!).

மகன்களாக வரும் இருவரில் ஒரு அஜீத், அரவாணியாக நடிக்கிறார். இதற்காக அஜீத்துக்கு சிறப்பான மேக்கப்போடப்படுகிறதாம். அத்தோடு அரவாணிகள் சிலரை வரவழைத்து அவர்களின் நடை, உடை பாவனைகளை அப்படியே ஸ்டடிசெய்து வருகிறாராம் அஜீத்.

மற்றொரு அஜீத்துக்கு ஜோடியாக ஆஷின் நடிக்கிறார் என்பதை ஏற்கனவே சொல்லியுள்ளோம். அரவாணியாக நடிக்கும்அஜீத்துக்கு யார் ஜோடி என்பது இதுவரை முடிவாகவில்லையாம்.

அரவாணி:

இதற்கிடையே அரவாணி என்ற தலைப்பிலேயே ஒரு படம் தயாராகி வருகிறது.

இந்தப் படத்தில் நடிக்க விந்தியா, ரதி போன்ற மார்க்கெட் இழந்த நடிகைகளை அணுகினர். ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர்.ஆனால் தயாரிப்பாளர் அசராமல் கூவாகம் விழாவில் ஒரு அரவாணியைப் பிடித்து படப்பிடிப்பைத் தொடங்கி விட்டார்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இந்த அரவாணி ஒரு சாயலில் விந்தியா மாதிரியே இருக்கிறாராம். இவர் விழுப்புரம்மாவட்டத்தில் ஒரு அரசியல் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பவராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X