Just In
- 2 hrs ago
சாட்சிகளுடன் பல காட்சிகளில் கதை சொல்லும் மெரீனா புரட்சி
- 3 hrs ago
நீங்களே கேப்ஷன் கொடுங்க... உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டி.. பிரபல நடிகை குசும்பு!
- 4 hrs ago
பாவம் யாரு பெத்த புள்ளையோ.. நம்மள நம்பி இவ்ளோ புரொமோஷன் பண்றாங்க.. யங் நடிகரின் மைண்ட் வாய்ஸ்
- 4 hrs ago
அந்தப் படத்துலலாம் நடிக்க நேரமே இல்லைங்க... டாப்ஸி எஸ்கேப்
Don't Miss!
- News
டெல்லியை அடுத்து உ.பியிலும் பரபரப்பு.. அலிகார் பல்கலைக்கழகத்தில் போலீஸ்.. மாணவர்கள் மீது தடியடி!
- Sports
என்ன திட்டு திட்டுனீங்க? இப்ப பேசுங்க பார்ப்போம்.. செம பதிலடி கொடுத்த இளம் வீரர்!
- Automobiles
திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...
- Finance
50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..!
- Lifestyle
இந்த வாரம் யாருக்கெல்லாம் பணம் மழையா கொட்டப்போகுது தெரியுமா?
- Technology
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.!
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஹீரோ .. ஹீரோ ..
சமீப காலமாக தோல்விப் படங்களையே தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கும் அஜீத் சற்றே சுதாரித்துள்ளார்.இனிமேல் வெற்றிப் படங்களை மட்டுமே கொடுக்கும் வகையில் நல்ல படங்களாகப் பார்த்து நடிக்க வேண்டும்என்று முடிவு செய்துள்ளார்.
தற்போது சரண் இயக்கத்தில் பூஜாவுடன் அட்டகாசம் படத்திலும், லிங்குசாமி இயக்கத்தில் த்ரிஷாவுடன் ஜிபடத்திலும் அஜீத் நடித்து வருகிறார்.
சூர்யா மூவிஸ் ஏ.எம்.ரத்னம் அஜீத்தை வைத்து இரண்டு படங்கள் தயாரிப்பது குறித்து அவரிடம் பேசியிருக்கிறார்என்பதையும், ஒரு படத்தை பாலாவும் மற்றொரு படத்தை தரணியும் இயக்குகிறார்கள் என்பதையும் நாம்ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.
இப்போது, இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் செல்வராகவனுடன் அணி சேருகிறார் அஜீத்.இருவரும் இணைந்து வித்தியாசமான கதையமைப்பில் அட்டகாசமான படத்தைக் கொடுக்கப் போகிறார்களாம்.
இதற்கான பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. அஜீத்திற்கேற்ற வகையில் அருமையான கதையைசெல்வராகவன் தயார் செய்துள்ளாராம். அஜீத்திற்கும் கதை பிடித்து விட்டது. விரைவில் படப்பிடிப்பைதொடங்கவும் முடிவு செய்துள்ளார்கள்.
வழக்கம்போல இந்தப் படத்திற்கும் யுவன்ஷங்கர் ராஜாதான் இசை. ஏற்கனவே யுவனின் இசையில் அஜீத் தீனாபடத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் சுமாராக ஓடியதற்கு யுவனின் அற்புதமான இசையும் ஒரு காரணம்.
இதேபோல, ஏவி.எம். நிறுவனத்தின் தயாரிப்பிலும் அஜீத் நடிக்கவுள்ளதாக பேச்சு அடிபடுகிறது.
தனக்குப் பின்னால் அறிமுகமாகி தலையெடுத்து விட்டவர்களை ஒரு கை பார்ப்பது என்ற முடிவில் மும்ரமாகஇறங்கியுள்ளார் அஜீத்.
இதற்கிடையே நிக் ஆர்ட்ஸ் நிறுவனத்தில் தயாரிப்பில் அஜீத் நடித்துக் கொண்டிருந்த மிரட்டல் படம் டிராப்ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. அஜீத், ஆஷின் என்று அமர்க்களமாக தொடங்கப்பட்ட இந்தப் படம் ஒரு சிலகாட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் அப்படியே நிற்கிறது.
இந்தப் படத்தை நம்பி இயக்குநர் முருகதாஸ், தெலுங்கில் சிரஞ்சீவி படத்தை இயக்கும் வாய்ப்பை மறுத்துவிட்டார்.நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியோடு ஏற்பட்ட ஒரு சில பிரச்சினைகள் காரணமாக படத்தை வேறு ஹீரோவை வைத்துஎடுத்துக் கொள்ளும்படி அஜீத் கூறிவிட்டதால் முருகதாஸ் குழம்பிப் போயிருக்கிறார்.
இதற்கிடையே நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திக்குப் பதிலாக தனது ஆஸ்தான தயாரிப்பாளராக தீனா, அட்டகாசம் படதயாரிப்பாளர் கார்த்திகேயனை வளர்த்துவிடும் முயற்சியில் அஜீத் இருப்பதாகக் கூறப்படுகிறது.
தடாலடியா நிறைய பண்றீங்க, கொஞ்சம் கவனம் தலை!