twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹீரோ .. ஹீரோ ..

    By Staff
    |

    ரெட் படத்தின் படுதோல்வியால் நொந்துபோய்விட்டார் அஜீத். மிக மோசமான டைரக்சனுக்கு எடுத்துக் காட்டாக அந்தப் படம்அமைந்தது. தனது ரேட்டை அதிகரிக்க நினைத்திருந்த அஜீத்துக்கு ரெட்டின் தோல்வி பெரும் அடி தான்.

    ஆஸ்திரேலியாவில் ஜாலியாக இருந்த அஜீத்துக்கு ரெட் படத்தின் படு ஊத்தல் பற்றி தகவல் வர உடனே தனது ஹாலிடேயை ரத்துசெய்துவிட்டு ஊர் திரும்பிவிட்டார்.

    அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டார். அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் பெயர் திருடா. விஜய்காந்தை வைத்துவாஞ்சிநாதன் படத்தை இயக்கிய மலையாள இயக்குநர் ஷாஜி கைலாஷ் தான் இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.

    சமீபத்தில் பிரபு-பிரபுதேவாவை வைத்து ஹிட் படமான சார்லி சாப்ளினைத் தயாரித்த ரோஜா கம்பைன்ஸ் நிறுவனம்தான்திருடாவை தயாரிக்கிறது.

    அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகை உள்ளிட்ட பிற கலைஞர்கள் இன்னும் முடிவு செய்யப்பட்டவில்லை. ஆனால்,இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா என்று முடிவு செய்துவிட்டார்கள். அஜீத் தான் யுவன்சங்கரை ரெகமண்ட் செய்ததாகச்சொல்கிறார்கள்.

    ஸ்வாமி என்பவர் கதை, வசனத்தைக் கவனிக்கிறார். ராஜு சுந்தரம் தான் நடனம்.

    படத்தின் கதை கலக்கலாக இருக்குமாம். ரெட் படம் ஊத்திக் கொண்டதால் சரிந்து கொண்டுள்ள அஜீத்தின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தும்வகையில் படம் அமையுமாம்.

    ரசிகர்களின் மனதைத் திருடினால் சரிதான்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X