ஹீரோ .. ஹீரோ ..
வர வர அஜீத் அட்டகாசம் தாங்க முடியல சாமியோவ். பயப்படாதீங்க, நீங்க பயப்படற மாதிரி எதுவும் இல்லை.
முன்பு சிறிய ரிமோட் கண்ட்ரோல் விமானங்களை வாங்கி பறக்கவிட்டு வந்தவர், பின்னர் அவற்றை வடிவமைத்து வந்தார். இப்போதும் ஊருக்கு வெளியேபோய் இந்த ரிமோட் விமானங்களை இயக்குவது அவருக்கு மிக விருப்பமான பொழுதுபோக்கு. ஷாலினியையும் ரிமோட் விமானத்துக்குஅடிமையாக்கிவிட்டாராம்.
இப்போது கொஞ்ச நாட்களாக நிஜ விமானங்களை ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். சிறு விமானங்கள் மட்டுமின்றி ஹெலிகாப்டர் ஓட்டவும் கற்றுவருகிறார் அஜீத். விமானி ஆவதுதான் அவரது இப்போதைய லட்சியமாம். குறிப்பிட்ட மணி நேரங்கள் பறந்து விட்டால், அவருக்கு விமானிக்கானலைசென்ஸ் கிடைத்து விடுமாம்.
லைசென்ஸ் கைக்கு வந்தவுடன் செஸ்னா ரக குட்டி விமானத்தை வாங்குவதாக உள்ளாராம் அஜீத். இதனால் வெளி மாநிலங்கள் மற்றும் விமானத் தளம்உள்ள ஊர்களில் சூட்டிங் என்றால் அதில் தான் வருவேன் என்று ஜாலியாக கூறி வருகிறாராம்.
அஜீத்தின் இந்த வளர்ச்சி சினிமா உலகில் பலருக்கு வயிற்றெரிச்சலை உண்டாக்கியுள்ளது. இந்த நடிகர்களிடம் கோடிக்கணக்கில் பணம் கொட்டிக்கிடந்தாலும் இந்த மாதிரி அட்வென்சர்களக்கு எல்லாம் இவர்களுக்கு ஒத்து வருவதில்லை. சினிமாவில் தான் வீரதீர ஆட்டம் போடுவார்கள்.
அஜீத்தின் இந்த முயற்சிகளை ஆர்வக் கோளாறு என்று வர்ணிக்க ஆரம்பித்துள்ள இந்த சக நடிகர்கள். தமிழ் சினிமாவில் இதுவரை எந்த பெரிய ஹீரோவிடம்இப்படிப்பட்ட ஆர்வக் கோளாறு இருந்ததில்லை என்று நக்கல் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள் அவர்கள்.
பி.கு: சென்னையில் புதிதாக போடப்பட்டுள்ள கிழக்கு கடற்கரை சாலையில், ஒரு அதி நவீன டுகாட்டி ரேஸ் பைக் அவ்வப்போது மின்னல் வேகத்தில் பறந்துசெல்லும். அடுத்த முறை அந்த பைக் உங்களைக் கடக்கும்போது நன்றாக உற்றுப் பாருங்கள். ஹெல்மெட்டுக்குள் அஜீத் முகம் தெரியும். பைக் ரேஸ்பைத்தியமான அஜீத் நடிக்க வரும் முன் சோழாவரத்தில் கலக்கியவர் தான்.


Click it and Unblock the Notifications











