ஹீரோ .. ஹீரோ ..

By Staff

சென்னையில் நடந்த கார் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்தில் நடிகர் அஜித்குமார் மயிரிழையில் உயிர் தப்பினார்.

கார் பந்தயம், பைக் பந்தயம் என்று அடிக்கடி இதுபோன்ற மயிர்க் கூச்செறியும் பந்தயங்களில் கலந்து கொள்வதுஅஜித்தின் வழக்கம்.

அதேபோல் சென்னை அருகே உள்ள இருங்காட்டுக் கோட்டையில் ஒரு கார் பந்தயம் நடைபெற்றது.

10-ஸ்லாப், 15-ஸ்லாப் என்று இரு பிரிவுகளாக நடந்த இந்தப் பந்தயத்தில் அஜித் உள்பட 18 பேர் கலந்துகொண்டனர்.

முதலில் நடந்த 10-ஸ்லாப் பந்தயத்தில் அஜித் கலந்து கொண்டார். பயங்கர வேகத்தில் சென்று கொண்டிருந்தபோது அவருடைய கார் திடீரென்று தடுமாறி டிராக்கை விட்டு வெளியே சென்றது.

இதனால் லேசான அதிர்ச்சி அடைந்த அஜித், அந்தப் பந்தயத்திலிருந்து விலகிக் கொண்டார்.

இதையடுத்து 15-ஸ்லாப் பந்தயங்கள் தொடங்கின. இதில் அஜித் கலந்து கொண்டார்.

இந்தப் பந்தயத்தின் போது இரண்டாவது ரவுண்டில் உள்ள ஒரு வளைவில் ஒரு கார் பழுதாகி நின்றது. இதையடுத்துஅந்தக் காரை ஓட்டி வந்தவரும் கருணா, ஹரி என்ற இரண்டு இளைஞர்களும் சேர்ந்து அதை ஓரமாகஅப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது பின்னால் மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்த ஒரு கார், பழுதாகி நின்று கொண்டிருந்த காரின் மீதுபயங்கரமாக மோதியது. இதில் கருணாவும் ஹரியும் தூக்கி வீசப்பட்டனர். அவர்களுடைய கால்களும் முறிந்துவிட்டன.

இதையடுத்து பின்னால் வேக வேகமாக வந்து கொண்டிருந்த கார்களும் வரிசையாக மோதி மோதி நின்றன.

இவர்களுக்குப் பின்னால் 6வதாக வந்து கொண்டிருந்த அஜித், வரிசையாக நின்று கொண்டிருந்த கார்களைப்பார்த்ததும் தன் காரை வலப்பக்கமாகத் திருப்பி டிராக்கை விட்டு வெளியேறிச் சென்று நிறுத்தினார்.

இதில் அவருடைய கார் ஓரளவு சேதமடைந்தது. ஆனாலும் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை. உடனடியாகக் காரைவிட்டு இறங்கி, விபத்தில் சிக்கிக் கொண்டிருந்தவர்களை மீட்பதற்கு அஜித் உதவினார்.

காயமடைந்தவர்கள் அனைவரும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

கார்கள் மோதிக் கொண்ட பயங்கரத்தைப் பார்த்த அஜித்தின் மனைவியான நடிகை ஷாலினி மிகவும் டென்ஷனாகிஅஜித்தை நோக்கி ஓடி வந்தார். அவருடைய கண்கள் கலங்கி விட்டன.

இதையடுத்து ஷாலினியைச் சமாதானப்படுத்தினார் அஜித். அப்படியும் அவர் சமாதானமாகல் இருக்கவே அந்தஇடத்திலேயே பலர் முன்னிலையிலும் ஷாலினிக்கு முத்தம் கொடுத்து சந்தோஷப்படுத்தினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X