கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்க்கும் அஜித்... இணையத்தில் கசிந்த ‘அஜித் 62’ கதை !
சென்னை : அஜித் 62 திரைப்படத்தின் கதை படப்பிடிப்புக்கு முன்பே இணையத்தில் கசிந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
வலிமை திரைப்படம் 200க்கு மேல் வசூலாகி உள்ளதாக அண்மையில் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஜீ5 ஓடிடி தளத்தில் இன்று முதல் வலிமை வெளியாகி உள்ளது.

அஜித் 62
வலிமை படத்தை தொடர்ந்து அடுத்ததாக போல் மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஐந்தாவது முறையாக அஜித்துடன் ஜோடி சேருகிறார் நயன்தாரா.

105 கோடி சம்பளம்
இதெல்லாம் ஒருபுறமிருக்க இந்த படத்திற்காக அஜித் 100 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளார். ஆனால் லைகா நிறுவனம் அவர் கேட்ட தொகையை விட 5 கோடி அதிகமாக கொடுக்க முன்வந்துள்ளது. அதாவது இந்த படத்திற்கு அஜித்திற்கு 105 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க உள்ளது லைகா நிறுவனம்.

அஜித் 62 கதை இதுதானா
இந்நிலையில், அஜித் 62 திரைப்படத்தின் கதை இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது விக்னேஷ் சிவன் இயக்க உள்ள இந்த படத்தில், அஜித் ஒரு உணவு நிறுவனத்தை தொடங்குகிறார். இந்த உணவு நிறுவனம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இவரின் வளர்ச்சி பிடிக்காத கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக இணைந்து அஜித்தை மிரட்டுகின்றனர். இதுதான் அஜித் 62 திரைப்படத்தின் கதை எனக்கூறப்படுகிறது.
Recommended Video

படப்பிடிப்புக்கு முன்பாக
தமிழில் நிறைய கார்ப்பரேட் நிறுவனம் குறித்த கதைகள் நிறையே வெளியாகி உள்ளன. விஜய் நடித்த கத்தி, ஜெயம்ரவி நடித்த பூமி போன்ற திரைப்படங்களில் கதாநாயகன் கார்ப்பரேட் நிறுவனத்தை எதிர்ந்து போராடுவார். அதே போல அஜித்தின் 62 திரைப்படமும் கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்த்து போராடும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே படத்தின் கதை குறித்து இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











