அஜீத்தின் கெளன்டர் அட்டாக் பாலாவுடன் ஏற்பட்ட மோதல் குறித்து வாய் திறக்காமல் உள்ள அஜீத், இப்போதுபாலாவின் நான் கடவுள் படத்துக்குப் போட்டியாக புதுப் படம் ஒன்றில்நடிக்கவுள்ளார்.அஜீத்தைத் தூக்கிவிட்டு ஆர்யாவை ஹீரோவாக்கி நான் கடவுளை எடுக்கிறார் பாலா.இதையடுத்து ஆர்யாவை வைத்து அறிந்தும் அறியாமலும், பட்டியல் ஆகிய ஹிட் படங்களைதந்த விஷ்ணுவர்த்தனை டைரக்டராக்கி ஒரு படத்தில் நடிக்கிறார் அஜீத்.பாலாவின் நான் கடவுள் ரிலீஸ் ஆகும் அதே நாளில் இந்தப் படத்தை திரையிட அஜீத்திட்டமிட்டுள்ளார்.இந்தப் படத்தை மோகன் நடராஜன் தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் மூலம் தான் யார்என்பதை பாலாவுக்கு நிரூபிக்க முடிவு செய்துள்ளாராம் அஜீத்.இந் நிலையில் அஜீத், ஆசின் நடிப்பில் உருவாகியுள்ள காட்ஃபாதர் விரைவில்வெளியிடப்படவுள்ளதாம்.பரமசிவன், திருப்பதி ஆகிய படங்களுக்கு முன்னதாக அஜீத் நடித்த படம் தான்காட்ஃபாதர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியின்தயாரிப்பில் உருவான இந்தப் படம் பாதியிலேயே பல்வேறு பிரச்சினைகளில் தொக்கிநின்று போனது. அஜீத்தின் நெருங்கிய நண்பராக திகழ்ந்த சக்கரவர்த்திக்கும், அஜீத்துக்கும் இடையேமனக் கசப்பு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்தனர். இந் நிலையில் ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி காட்ஃபாதர் படத்தில் நடிக்க ஆரம்பித்தார் அஜீத்.ஆனால், படத்தை முடிப்பதற்கு போதிய பணம் இல்லாததால் சக்கரவர்த்திதடுமாறினார். இந் நிலையில் தனது கால்ஷீட் முடிந்து விட்டதால் பரமசிவன்படத்திற்குப் போய் விட்டார் அஜீத்.இதையடுத்து அவர் மீது தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால்பணம இல்லாததால் படத்தை எடுக்குத் தாமதம் செய்ததால் சக்கரவர்த்திக்கு சாதகமாகஉத்தரவு கிடைக்கவில்லை. இந் நிலையில் பல்வேறு தரப்பினரின் சமரசத்தைத் தொடர்ந்து காட்ஃபாதர் படத்தில்தொடர்ந்து நடித்து படத்தை முடித்துக் கொடுத்தார் அஜீத். ஆனாலும் படத்தை ரிலீஸ்செய்ய முடியாமல் சிக்கல்கள் தொடர்ந்து கொண்டிருந்தன.இந்த நிலையில் காட்ஃபாதர் படத்தை சமீபத்தில் ரஜினிகாந்துக்கு (அவர் ஸ்பெயினில்இருந்து திரும்பி வந்த கையோடு) போட்டுக் காட்டினார் கே.எஸ்.ரவிக்குமார்.படத்தை முழுமையாக பார்த்த ரஜினி, அஜீத்தின் நடிப்பு அருமையாக இருக்கிறதுஎன்று வாய் விட்டுப் பாராட்டினாராம். இப்படிப்பட்ட படத்தையெல்லாம் லேட்பண்ணாமல், உடனே ரிலீஸ் செய்ய ஏற்பாடு பண்ணுங்க என்று இயக்குனர்கே.எஸ்.ரவிக்குமாரிடமும் அஜீத்திடமும் அட்வைஸ் செய்துள்ளார்.அவர் வாய் கூர்த்தமோ என்னவோ காட்ஃபாதருக்கு இருந்து வந்த சிக்கல்கள் தீர்ந்துவிட்டதாம். இன்னும் சில நாட்களில் படத்தை வெளியிட முயற்சிகள்தொடங்கியுள்ளன.காட்ஃபாதரில் அஜீத் 3 வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளார். ஒரு வேடம்அரவாணி வேடமாகும். இதற்காக அரவாணிகளை வரவழைத்து அவர்களது நெளிவு,சுழிவுகளை அறிந்து கொண்டு தத்ரூபமாக நடித்தாராம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான இப்படம் அஜீத்துக்கு பெரும் பிரேக்காகஇருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அஜித்தை மிரட்டிய பைனான்சியருக்கு அடி:இந் நிலையில், பாலாவுக்காக அஜீத்தை மிரட்டி சினிமா பைனான்சியர்களில் ஒருவரான சஞ்சய் மீது தாக்குதல் நடந்தது.பைனான்சியர்கள் மதுரை அன்பு, சஞ்சய் ஆகியோரும் தயாரிப்பாளர் தேனப்பனும் இன்னும் சிலரும் சேர்ந்து ஹோட்டலில் அடைத்து வைத்து அஜீத்தை மிரட்டி பணம்பறித்தனர்.இந் நிலையில் சஞ்சய் மீது நள்ளிரவில் தாக்குதல் நடந்துள்ளது. தன் மனைவியுடன் கீழ்பாக்கம் நியூ ஆவடி சாலையில் உள்ள வீட்டுக்கு வந்த அவர் காரில் இருந்துஇறங்கிய போது 2 பேர் அவரிடம் வீட்டு முகவரி விசாரிப்பது போல வந்துள்ளனர். அந்த நேரத்தில் ஒரு குவாலிஸ் காரும் அங்கு வந்து நின்றது.அதிலிருந்து இறங்கிய 10க்கும் மேற்பட்டடோர் சஞ்சய் மற்றும் அவரது மனைவியை சரமாரியாக தாக்கினர். பின்னர் காரில் ஏறி தப்பி சென்றனர்.படுகாயம் அடைந்த சஞ்சய் மற்றும் அவரது மனைவி இருவரும் கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சஞ்சயை தாக்கியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

By Staff

பாலாவுடன் ஏற்பட்ட மோதல் குறித்து வாய் திறக்காமல் உள்ள அஜீத், இப்போதுபாலாவின் நான் கடவுள் படத்துக்குப் போட்டியாக புதுப் படம் ஒன்றில்நடிக்கவுள்ளார்.

அஜீத்தைத் தூக்கிவிட்டு ஆர்யாவை ஹீரோவாக்கி நான் கடவுளை எடுக்கிறார் பாலா.

இதையடுத்து ஆர்யாவை வைத்து அறிந்தும் அறியாமலும், பட்டியல் ஆகிய ஹிட் படங்களைதந்த விஷ்ணுவர்த்தனை டைரக்டராக்கி ஒரு படத்தில் நடிக்கிறார் அஜீத்.

பாலாவின் நான் கடவுள் ரிலீஸ் ஆகும் அதே நாளில் இந்தப் படத்தை திரையிட அஜீத்திட்டமிட்டுள்ளார்.

இந்தப் படத்தை மோகன் நடராஜன் தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் மூலம் தான் யார்என்பதை பாலாவுக்கு நிரூபிக்க முடிவு செய்துள்ளாராம் அஜீத்.

இந் நிலையில் அஜீத், ஆசின் நடிப்பில் உருவாகியுள்ள காட்ஃபாதர் விரைவில்வெளியிடப்படவுள்ளதாம்.

பரமசிவன், திருப்பதி ஆகிய படங்களுக்கு முன்னதாக அஜீத் நடித்த படம் தான்காட்ஃபாதர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியின்தயாரிப்பில் உருவான இந்தப் படம் பாதியிலேயே பல்வேறு பிரச்சினைகளில் தொக்கிநின்று போனது.


அஜீத்தின் நெருங்கிய நண்பராக திகழ்ந்த சக்கரவர்த்திக்கும், அஜீத்துக்கும் இடையேமனக் கசப்பு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்தனர். இந் நிலையில் ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி காட்ஃபாதர் படத்தில் நடிக்க ஆரம்பித்தார் அஜீத்.

ஆனால், படத்தை முடிப்பதற்கு போதிய பணம் இல்லாததால் சக்கரவர்த்திதடுமாறினார். இந் நிலையில் தனது கால்ஷீட் முடிந்து விட்டதால் பரமசிவன்படத்திற்குப் போய் விட்டார் அஜீத்.

இதையடுத்து அவர் மீது தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால்பணம இல்லாததால் படத்தை எடுக்குத் தாமதம் செய்ததால் சக்கரவர்த்திக்கு சாதகமாகஉத்தரவு கிடைக்கவில்லை.


இந் நிலையில் பல்வேறு தரப்பினரின் சமரசத்தைத் தொடர்ந்து காட்ஃபாதர் படத்தில்தொடர்ந்து நடித்து படத்தை முடித்துக் கொடுத்தார் அஜீத். ஆனாலும் படத்தை ரிலீஸ்செய்ய முடியாமல் சிக்கல்கள் தொடர்ந்து கொண்டிருந்தன.

இந்த நிலையில் காட்ஃபாதர் படத்தை சமீபத்தில் ரஜினிகாந்துக்கு (அவர் ஸ்பெயினில்இருந்து திரும்பி வந்த கையோடு) போட்டுக் காட்டினார் கே.எஸ்.ரவிக்குமார்.

படத்தை முழுமையாக பார்த்த ரஜினி, அஜீத்தின் நடிப்பு அருமையாக இருக்கிறதுஎன்று வாய் விட்டுப் பாராட்டினாராம். இப்படிப்பட்ட படத்தையெல்லாம் லேட்பண்ணாமல், உடனே ரிலீஸ் செய்ய ஏற்பாடு பண்ணுங்க என்று இயக்குனர்கே.எஸ்.ரவிக்குமாரிடமும் அஜீத்திடமும் அட்வைஸ் செய்துள்ளார்.

அவர் வாய் கூர்த்தமோ என்னவோ காட்ஃபாதருக்கு இருந்து வந்த சிக்கல்கள் தீர்ந்துவிட்டதாம். இன்னும் சில நாட்களில் படத்தை வெளியிட முயற்சிகள்தொடங்கியுள்ளன.

காட்ஃபாதரில் அஜீத் 3 வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளார். ஒரு வேடம்அரவாணி வேடமாகும். இதற்காக அரவாணிகளை வரவழைத்து அவர்களது நெளிவு,சுழிவுகளை அறிந்து கொண்டு தத்ரூபமாக நடித்தாராம்.


ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான இப்படம் அஜீத்துக்கு பெரும் பிரேக்காகஇருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்தை மிரட்டிய பைனான்சியருக்கு அடி:

இந் நிலையில், பாலாவுக்காக அஜீத்தை மிரட்டி சினிமா பைனான்சியர்களில் ஒருவரான சஞ்சய் மீது தாக்குதல் நடந்தது.

பைனான்சியர்கள் மதுரை அன்பு, சஞ்சய் ஆகியோரும் தயாரிப்பாளர் தேனப்பனும் இன்னும் சிலரும் சேர்ந்து ஹோட்டலில் அடைத்து வைத்து அஜீத்தை மிரட்டி பணம்பறித்தனர்.

இந் நிலையில் சஞ்சய் மீது நள்ளிரவில் தாக்குதல் நடந்துள்ளது. தன் மனைவியுடன் கீழ்பாக்கம் நியூ ஆவடி சாலையில் உள்ள வீட்டுக்கு வந்த அவர் காரில் இருந்துஇறங்கிய போது 2 பேர் அவரிடம் வீட்டு முகவரி விசாரிப்பது போல வந்துள்ளனர். அந்த நேரத்தில் ஒரு குவாலிஸ் காரும் அங்கு வந்து நின்றது.

அதிலிருந்து இறங்கிய 10க்கும் மேற்பட்டடோர் சஞ்சய் மற்றும் அவரது மனைவியை சரமாரியாக தாக்கினர். பின்னர் காரில் ஏறி தப்பி சென்றனர்.படுகாயம் அடைந்த சஞ்சய் மற்றும் அவரது மனைவி இருவரும் கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சஞ்சயை தாக்கியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X