»   »  தல வரலாறு!

தல வரலாறு!

Subscribe to Oneindia Tamil

அஜீத் நடித்து ரொம்ப காலமாக முடங்கிக் கிடக்கும் காட்பாதர் படத்தின் பெயரை வரலாறு என மாற்றிவிட்டார்கள். தமிழ் படப் பெயர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள சலுகையே இதற்குக் காரணம் என்கிறார்கள்.

கொஞ்ச காலத்திற்கு முன்பு வரை நெருங்கிய நண்பராக இருந்த நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியின் தயாரிப்பில் அஜீத்ரொம்ப காலத்திற்கு முன்பு நடிக்க ஒப்புக் கொண்ட படம் காட்பாதர். கே.எஸ். ரவிக்குமார்தான் படத்தைஇயக்கினார்.

இடையில், சக்கரைக்கும், அஜீத்துக்கும் இடையே பஞ்சாயத்து ஆகி இருவரும் பிரிந்தனர். இதனால் படம்தொங்கியது. பல்வேறு சமரச முயற்சிகளுக்குப் பின்னர் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டார் அஜீத். இதனால்காட்பாதர் வளரத் தொடங்கியது.

படத்தை எடுத்து முடித்த பிறகும் பிரச்சினை நீடித்தது. இதனால் படத்தை வெளியிட முடியாமல் தவித்துவருகின்றனர். இந்த நிலையில் படத்தின் பெயரை வரலாறு என மாற்றியுள்ளனராம். பெயரை மாற்றிய சூட்டோடுபடத்தை விரைவில்ரிலீஸ் செய்கிறார்களாம்.

இந்த நிலையில் விஜய்யின் போக்கிரி படத்திற்கு டேக்கா கொடுத்து வரும் ஆசின், அஜீத்தின் ஆழ்வார்படத்திற்கும் அல்வா கொடுத்து தலக்கு டென்ஷன் கொடுத்துள்ளாராம்.

கேரளத்து சிக் சிப்ஸ் அசின், முன்னணி நடிகர்களுடன் மட்டுமே ஜோடி போடுவது என முடிவெடுத்துள்ளார்.விக்ரம், அஜீத், விஜய், சூர்யா ஆகியோருடன் மட்டுமே மாறி மாறி ஆட்டம் போட முடிவு செய்துள்ள அசின்இப்போது விஜய், அஜீத் ஆகியோருடன் நடித்து வருகிறார்.விதி விலக்காக கமல்ஹாசனுடன் தசாவதாரம் படத்திலும் தலை காட்டியுள்ளார். விஜய்யுடன் போக்கிரியிலும்,அஜீத்துடன் ஆழ்வாரிலும் நடித்து வரும் ஆசின் கால்ஷீட் குழப்பத்தில் உச்சத்திற்குப் போயுள்ளதாககோலிவுட்டில் முனுமுனுக்கிறார்கள்.

விஜய்யுடன் நடித்து வரும் போக்கிரி படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் குழப்பி வருகிறாராம் ஆசின்.அதேபோல ஆழ்வார் படத்திற்கும் அவர் அடிக்கடி டேக்கா கொடுத்து விடுகிறாராம். அங்கும் இங்குமாகு மாறிமாறி குழப்புவதால்படப்பிடிப்பு படு தாமதமாக நடந்து வருகிறதாம்.

இது போதாதென்று இப்போது கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தில் நடிக்கப் போய் விட்டார் ஆசின். இதனால்ஆழ்வாரும், போக்கிரியும் அந்தரத்தில் நிற்கிறார்களாம்.

ஏற்கனவே விஜய்யுடன் மட்டும் ரொம்ப நட்பு பாராட்டி ஆசின் பழகி வருவதால் கடுப்பாக இருந்தார் அஜீத்.

இப்போது தான் பெரிதும் நம்பியிருக்கும் ஆழ்வார் படத்தை லேட்டாக்கி வருவதால் ஆசின் மீதுகடுப்பாகியுள்ளாராம்.

அனேகமாக இருவரும் இணைந்து நடிக்கும் கடைசிப் படம் இது தான் என்கிறது கோலிவுட் வட்டாரம். வம்புசெய்யும் ஆசினை தூக்கி விட்டு வேறு யாரையாவது போடலாமா என்று அஜீத் யோசிக்கும் அளவுக்கு அவரதுஅட்டகாசம்இருக்கிறதாம்.

அடக்கம் அமரருள் உய்க்கும்..

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil