கடைசியில் அஜித்தையும் அரசியல் விட்டு வைக்கவில்லையா?
Recommended Video

சென்னை: அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கும் அஜித்தை அரசியல் விடுவதாக இல்லை போன்று.
தலைப்பை பார்த்து அஜித் அரசியலுக்கு வருகிறாரோ என்று நினைக்க வேண்டாம். அரசியல் தனக்கு ஒத்து வராது என்ற முடிவில் அஜித் தெளிவாக இருக்கிறார். அதனால் படத்தில் அவரை அரசியல்வாதியாக்கப் போகிறார்களாம்.

ஹெச். வினோத் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கி வருகிறார். என்ன சார், தீரன் அதிகாரம் ஒன்று மாதிரி படம் எடுப்பீர்கள் என்று பார்த்தால் இப்படி தலயை ரீமேக் படத்தில் நடிக்க வைக்கிறீர்களே என்று ரசிகர்கள் புலம்பினார்கள்.
இந்த படம் தான் ரீமேக்காம். அடுத்ததாக அஜித்தை வைத்து அரசியல் படம் ஒன்றை எடுக்கப் போகிறாராம் வினோத். அந்த படத்தில் அஜித் அரசியல்வாதியாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
இதை வினோத் தான் உறுதி செய்ய வேண்டும். விஜய் ஏற்கனவே தொடர்ந்து படங்களில் அரசியல் பேசி வரும் நிலையில் அஜித்தும் அந்த வழியில் செல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
போனி கபூர் அஜித்தை வைத்து தயாரிக்கும் இரண்டு படங்களையுமே ஹெச். வினோத் தான் இயக்குகிறார். வினோத்தை போனி கபூருக்கு பரிந்துரை செய்ததே அஜித் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











