இந்த 'தல'க்கு இதே வேலையாப் போச்சு: சொல்பேச்சை கேட்பதே இல்லை
சென்னை: விஸ்வாசம் படத்தின் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த தல ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்து வரும் படம் விஸ்வாசம். ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தற்போது அஜித் சம்பந்தப்பட்ட சண்டை காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். வழக்கம் போல டூப் மாட்டேன் என்று கூறி அஜித்தே நடித்து வருகிறாராம்.
அஜித் சண்டை காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்து காயப்படுவது வழக்கமாகிவிட்டது. இதனால் தற்போதும் அவர் டூப் போடாமல் நடிப்பதை அறிந்து ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். திலீப் சுப்பராயன் தான் ஸ்டண்ட் மாஸ்டர். இந்த ஸ்டண்ட் காட்சிகள் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவேக், கோவை சரளா, யோகிபாபு, தம்பி ராமையா, போஸ் வெங்கட் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே விஸ்வாசம் படத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விஸ்வாசத்தை முடித்த பிறகு அஜித் தீரன் அதிகாரம் ஒன்று புகழ் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











