Ajith: விடாமுயற்சி அப்டேட்டே இன்னும் வரல... அதுக்குள்ள ஏகே 63 பூஜையா... ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!
சென்னை: அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. லைகா தயாரிக்கும் இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 63வது படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இந்நிலையில் இதுவரை விடாமுயற்சி அப்டேட் வெளியாகாத நிலையில், ஏகே 63 பூஜை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஜித் ரசிகர்களுக்கு பொங்கல் சர்ப்ரைஸ்
அஜித்தின் 62வது படமாக உருவாகி வரும் விடாமுயற்சி மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் ஆக்ஷன் ஜானரில் உருவாகும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் ரெஜினா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். விடாமுயற்சி ஷூட்டிங் முடிந்ததும் உடனடியாக ஏகே 63 படத்தில் நடிக்கவுள்ளாராம் அஜித்.

அதன்படி, அஜித்தின் 63வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக், பல ஆண்டுகளாக தனது சூப்பர் ஹீரோவை இயக்க காத்திருந்தார். கடந்தாண்டு வெளியான மார்க் ஆண்டனி கொடுத்த சூப்பர் ஹிட்டால், அஜித்துடன் இணைய வாய்ப்புக் கொடுத்துள்ளது. இதனையடுத்து அஜித் - ஆதிக் ரவிசந்திரன் இணையும் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.
தெலுங்குத் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், முதன்முறையாக அஜித் படத்தை தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீப காலங்களாக ஆக்ஷன் ஜானர் படங்களில் மட்டுமே நடித்து வரும் அஜித், ஏகே 63 மூவியில் காமெடியில் கலங்கடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இதனையடுத்து ஏகே 63 படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரொம்பவே சிம்பிளாக நடைபெற்ற இதில் அஜித் கலந்துகொண்டாரா இல்லையா என்பது பற்றி எதுவும் தெரியவில்லை. ஆனால் ஆதிக் ரவிச்சந்திரன் உட்பட படக்குழுவினர் மட்டுமே கலந்துகொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் ஷூட்டிங் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தொடங்கும் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அஜித்தின் விடாமுயற்சி அப்டேட் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. முக்கியமாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ரிலீஸ் தேதி உட்பட எதனையும் படக்குழு அறிவிக்கவில்லை. ஆனால், அதற்குள்ளாக ஏகே 63 பூஜை நடைபெற்றுள்ளது அஜித் ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











