Ajith AK 64: வெற்றிமாறன் அவுட்... சிறுத்தை சிவா இன்... ஏகே 64-ல் அஜித் போட்ட புது பிளான்!

சென்னை: அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படம் மே மாதம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ஏகே 63 படத்தில் நடிக்கவுள்ள அஜித், வெற்றிமாறனுடன் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் தற்போது ஏகே 64 படம் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித்தின் ஏகே 64 இயக்குநர் யார்
தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித், இனி கோலிவுட்டில் தனிகாட்டு ராஜாவாக வலம் வரப் போகிறார். விஜய் அரசியலில் களமிறங்கவுள்ளதால் அஜித் நடிக்கும் படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் அஜித். இது அஜித்தின் 62வது படமாக உருவாகி வருகிறது.

 Ajith AK 64 Ajith asked Director Siva to prepare that script for AK 64

விடாமுயற்சி மே மாதம் அஜித் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் வெளியானதுமே ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் இணைய உள்ளார் அஜித். அதன்படி அஜித்தின் 63வது படமாக உருவாகும் இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ளது. முன்னதாக அஜித்தின் ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருந்தார். ஆனால், அவரது ஸ்க்ரிப்ட்டில் அஜித்துக்கு திருப்தி இல்லை என்பதால் கடைசி நேரத்தில் மகிழ் திருமேனி இணைந்தார்.

அந்நேரம் அஜித்தின் லிஸ்ட்டில் மேலும் சில இயக்குநர்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் அஜித்தின் 64வது படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இக்கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏகே 63 முடிந்ததும் ஏகே 64 இயக்குநர் அப்டேட் வெளியாகும் என தகவல்கள் தெரிவித்தன. ஆனால் இப்போது அதில் அஜித் மாற்றம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

விடுதலை 2, வாடிவாசல் என இரண்டு வருடங்களுக்கு பிஸியாக காணப்படுகிறார் வெற்றிமாறன். இதனால் அவருக்குப் பதிலாக சிறுத்தை சிவாவை ஏகே 64 இயக்குநராக களமிறக்க அஜித் முடிவு செய்துள்ளாராம். ஏற்கனவே வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என 4 படங்களில் அஜித்துடன் பயணித்துள்ளார் இயக்குநர் சிவா. தற்போது சூர்யாவின் கங்குவா படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டதால் அஜித்தின் ஏகே 64 ஆஃபருக்கு சிவா ஓகே சொல்லிவிட்டதாக தெரிகிறது.

அதன்படி அஜித் - சிறுத்தை சிவா இணையும் ஏகே 64 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தப் படம் குறித்து விரைவில் அபிஸியல் அப்டேட் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏகே 64 கூட்டணி உறுதியானால் அஜித் - சிறுத்தை சிவா காம்போ 5வது முறையாக இணையும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X