அஜித் - ஷாலினி 24ஆவது திருமண நாள்.. ட்ரெண்டாகும் புகைப்படங்கள்.. ரசிகர்கள் வாழ்த்து

சென்னை: அஜித்தும், ஷாலினியும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். கடந்த 2000ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். கோலிவுட்டின் சிறந்த ஜோடி என்ற பெயர் பெற்ற அஜித் - ஷாலினிக்கு அனௌஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள். அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். தனது குடும்பத்தினர் மீது அளவுக்கடந்த பாசம் வைத்திருப்பவர் அவர். இந்தச் சூழலில் அஜித்தும் ஷாலினியும் இன்று தங்களது 24ஆவது திருமண நாளை கொண்டாடுகிறார்கள்.

சரண் இயக்கத்தில் அமர்க்களம் படத்தில் அஜித்தும், ஷாலினியும் இணைந்து நடித்தனர். அந்தப் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதனையடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அனௌஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கின்றனர். கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி என்றால் அது அஜித்தும், ஷாலினியும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Ajith and Shalini are celebrating their 24th wedding anniversary today

பதறிய அஜித்குமார்: அமர்க்களம் படத்தில் கத்தியை வைத்து ஷாலினியை அஜித் மிரட்டுவது போன்று ஒரு காட்சி இருக்கும். அந்தக் காட்சியில் நடித்துக்கொண்டிருக்கும்போது உண்மையாகவே கத்தி ஷாலினியின் கையை கீறிவிட்டது. இதனால் பதறிப்போன அஜித்குமார் உடனே முதலுதவி செய்தார். அன்றைய தின ஷூட்டிங் முடிந்த பிறகு பொக்கே அனுப்பி நலம் விசாரித்தார் அஜித்.

சீக்கிரம் ஷூட்டிங்க முடிங்க சரண்: அதனைத் தொடர்ந்து ஒருமுறை சரண், ஷாலினி, அஜித் மூன்று பேரும் அமர்ந்திருக்க, 'சரண் சீக்கிரம் ஷூட்டிங்க முடிச்சிடுங்க இல்லைனா நான் ஷாலினிய லவ் பண்ணிடுவேன் போல' என போட்டு உடைத்திருக்கிறார் அஜித். அப்போதுதான் அஜித்துக்குள் காதல் இருப்பதை ஷாலினி லேசாக உணர்ந்திருக்கிறார்.

காதலை சொன்ன அஜித்: தொடர்ந்து ஷூட்டிங் போய்க்கொண்டிருந்தபோது ஒருகட்டத்தில் ஷாலினியிடம் அஜித் காதலை சொல்லிவிட்டார். உள்ளுக்குள் அஜித் மீது ஷாலினிக்கு ஆசை இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தனது அப்பாவிடம் பேச சொன்னார் ஷாலினி. அதேசமயம் அஜித் பேசுவதற்கு முன்பாகவே ஷாலினியே தனது தந்தையிடம் பேசியிருந்தார். அதனையடுத்து அஜித்தும் நேரடியாக ஷாலினி தந்தையிடம் பேச அவரும் ஒத்துக்கொண்டார். இதனையடுத்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமண நாள்: இந்நிலையில் அஜித்தும் ஷாலினியும் இன்று தங்களது 24ஆவது திருமண நாளை கொண்டாடிவருகிறார்கள். அவர்களுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்தினை தொடர்ந்து தெரிவித்துவருகிறார்கள். மேலும் அவர்கள் திருமண நாள் கொண்டாடிய புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன. அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். அடுத்து குட் பேட் அக்லி படத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X