அள்ள அள்ளக் குறையாத காதல்.. பிரான்ஸ் நாட்டில் பிள்ளைகளுடன் அஜித் - ஷாலினி அடித்த லூட்டி!

சென்னை: தமிழ் திரையுலகில் எத்தனையோ ஜோடிகள் வந்தாலும், ரசிகர்கள் மனதிற்கு எப்போதும் நெருக்கமான "ரியல் லைஃப்" ஜோடி அஜித் - ஷாலினி தான். இவர்களின் லேட்டஸ்ட் வெளிநாட்டுச் சுற்றுலா புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இந்த போட்டோக்களை நடிகை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

குறையாத காதல்: நடிகை ஷாலினி அஜித்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அள்ள அள்ளக் குறையாத காதலுடன் பிரான்ஸ் நாட்டில் என்ற அழகான கேப்ஷனுடன் சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் முதல் புகைப்படத்தில், பிரான்ஸ் நாட்டின் அழகிய பசுமையான புல்வெளித் தோட்டத்தில் அஜித்தும் ஷாலினியும் கைகோர்த்து நின்றபடி போஸ் கொடுத்துள்ளனர். அஜித் தனது வழக்கமான சால்ட் அண்ட் பெப்பர் மாஸ் லுக்கிலும், ஷாலினி வெள்ளை மற்றும் பிரவுன் நிற உடையில் செம்ம ஸ்லிம்மாக காட்சியளிக்கிறார். இவர்களின் இந்த ரொமாண்டிக் லுக் "அமர்க்களம்" பட நாட்களை ரசிகர்களுக்கு மீண்டும் நினைவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது.

Ajith Shalini family photo
Photo Credit:
குடும்ப புகைப்படம்: மற்றொரு புகைப்படத்தில், சூரியன் மறையும் பின்னணியில் ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்றாக இருக்கும் க்யூட் காட்சி பதிவாகியுள்ளது. இதில் அஜித், ஷாலினியுடன் அவர்களது மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் ஆகியோரும் செம்ம ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துள்ளனர். மிகவும் எதார்த்தமான, ஆடம்பரமில்லாத உடைகளில் ஒரு சாதாரண குடும்பமாக பிரான்ஸ் நாட்டின் அழகை ரசித்துக் கொண்டிருக்கும் இந்த புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான லைக்ஸ்களைக் குவித்து வைரலாகி வருகிறது. ஷூட்டிங், பைக் ரைடிங் என எவ்வளவு பிஸியாக இருந்தாலும், குடும்பத்திற்கான நேரத்தை அஜித் மாஸ்டர் தவறவிடுவதே இல்லை என அவரது ரசிகர்கள் இந்த புகைப்படங்களை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Ajith Shalini family photo
Photo Credit:
விரைவில் படப்பிடிப்பு : கடந்த மாதம்அஜித்குமாரின் தாயார் மோகினி மணி உடல்நலக் குறைவால் காலமானார். தாயின் மறைவு அஜித்தை ஆழமான சோகத்தில் ஆழ்த்திய நிலையில், அந்தப் பேரிழப்பிலிருந்து மீளவும், குடும்பத்தினருக்கு சற்றே மனமாற்றம் தேவைப்பட்டதாலும் இந்த பிரான்ஸ் பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார். இந்த இன்பச் சுற்றுலா முடிந்து சென்னை திரும்பியதும், அஜித் மீண்டும் தனது அடுத்தக்கட்ட ஷூட்டிங் வேலைகளில் தீவிரமாக இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X