விடாமுயற்சி விபத்து.. ஆரவ்விடம் மன்னிப்பு கேட்ட அஜித்குமார்.. இப்படியும் நடந்திருக்கா?
சென்னை: விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்திருக்கிறார் அஜித்குமார். மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடித்திருக்கிறார். இவற்றில் விடாமுயற்சி படம் பிப்ரவரி ஆறாம் தேதியும், குட் பேட் அக்லி ஏப்ரல் 10ஆம் தேதியும் ரிலீஸாகவிருக்கின்றன. இந்தச் சூழலில் அஜித் குறித்து ஆரவ் பேசியிருப்பது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதனையடுத்து லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்க கமிட்டானார் அவர். 2023ஆம் ஆண்டு படத்தின் அறிவிப்பு வெளியாகி ஷூட்டிங்கும் தொடங்கியது. ஆனால் ஷூட்டிங்கில் ஏகப்பட்ட பிரச்னைகள் என்று தகவல்கள் வந்துகொண்டிருந்தன. முக்கியமாக லைகா நிறுவனத்துக்கு பண நெருக்கடி; அதன் காரணமாக படம் வெளியாவதில் சிக்கல் என்றெல்லாம் தகவல்கள் பரவின. அதுமட்டுமின்றி மகிழ் திருமேனி வேண்டுமென்றே ஷூட்டிங்கை லேட்டாக்குகிறார் என்றும் கூறப்பட்டது.

விறுவிறு ஷூட்டிங்: ஆனால் படத்தில் எந்தவிதமான பிரச்னையும் இல்லை என்று படத்தில் பணியாற்றியவர்கள் தொடர்ந்து கூறினார்கள். அதன்படி படத்தின் ஷூட்டிங்கும் அஜர்பைஜான், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் கார் ஓட்டும்போது ஏற்பட்ட விபத்து தொடர்பான வீடியோ ஒன்றும் ட்ரெண்டானது. இதில் அஜித்துடன் ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரெய்லர் ரிலீஸ்: சூழல் இப்படி இருக்க சமீபத்தில்தான் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அது கலவையான விமர்சனத்தை பெற்றது. இருந்தாலும் அஜித்தின் ரசிகர்கள் அதனை கொண்டாடிவருகின்றனர். இதற்கிடையே பிரேக் டவுன் என்ற படத்தின் காப்பிதான் இந்த விடாமுயற்சி என்றும்; அதற்காக 150 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு பிரேக் டவுன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகா நிறுவனத்திடம் நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால்தான் ஜனவரி மாதம் ரிலீஸாகவிருந்த படம் பிப்ரவரி மாதத்துக்கு தள்ளிப்போனதாகவும் சிலர் கூறினார்கள்.
ஆரவ் பேட்டி: இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கில் நடந்த விபத்து குறித்து ஆரவ் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "அந்த ஆக்ஸிடெண்ட் ஏற்பட்டதும் என்னிடம் அஜித், நீ சென்று மருத்துவமனையில் எக்ஸ் ரே எடுக்க வேண்டும் என்றார். ஆனால் ஷூட்டிங்கை முடித்துவிட்டு எக்ஸ் ரே எடுத்துக்கொள்ளலாம் என்று நான் நினைத்தேன்.
அஜித்தின் ஆர்டர்: இதனையடுத்து ஷூட்டிங் முடிந்ததும் அவருடன் காரில் என்னை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து சென்றார். அவரே மருத்துவரிடம் அனைத்து விவரங்களையும் சொல்லி என்னை சோதித்து பார்க்க சொன்னார். அதுவரை அவர் வெளியில் காத்திருந்தார். மருத்துவர்கள் சோதித்துவிட்டு எதுவும் பெரிதாக இல்லை என்று சொன்ன பிறகு அஜித் என்னிடம் வந்து தன்னை மன்னித்துக்கொள்ளும்படி கேட்டார். எப்போதும் இது மாதிரி நடக்காது. என்னால் உனக்கு இப்படி ஆகிவிட்டதே என்று நினைக்கும்போது எனக்கு ரொம்பவே வருத்தம் என்றும் சொன்னார். அதற்கு நான், உங்களுடன் இருக்கும்போது இது மாதிரி ஒரு அனுபவம் கிடைத்திருக்கிறேதே என்று சொன்னேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











