twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமல், ரஜினி வரிசையில்.. நெகட்டிவ் ரோல்களில் பட்டையை கிளப்பும் அஜித்!

    By Veera Kumar
    |

    சென்னை: ஹீரோக்கள் நடிக்க தயங்கும் நெகட்டிவ் கதாப்பாத்திரங்களில் நடிகர் அஜித் முன்வந்து நடிப்பதோடு, அந்த கேரக்டர்களாக அஜித் நடித்த திரைப்படங்களுக்குதான், ரசிகர்களும் மிக அதிக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

    அஜித்தின் நெகட்டிவ் கதாப்பாத்திரங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு, பிற ஹீரோக்களையும், அதுபோன்ற கதாப்பாத்திரங்களை நோக்கி ஈர்க்க தொடங்கியுள்ளது.

    திரையுலக வாழ்க்கையின் தொடக்கத்தில், காதல் சப்ஜெக்ட்டுகளில் நடித்துவந்தவர் அஜித். 2001ல் வெளியான, இயக்குநர், ஏ.ஆர்.முருகதாசின் முதல் திரைப்படமான 'தீனா' அஜித்துக்கு ஆக்ஷன் ஹீரோ அந்தஸ்தை பெற்றுக்கொடுத்தது.

    தல தாறுமாறு

    தல தாறுமாறு

    தீனா திரைப்படத்தில் வரும் 'தல' என்ற வசனத்தை தொடர்ந்து, அஜித்தை தல என்று அழைத்து ரசிகர்கள் அவரை மாஸ் ஹீரோவாக உயர்த்தின. அடுத்ததாக அதே ஆண்டு வெளியான சிட்டிசனும் அவரை மாஸ் ஹீரோவாக உயர்த்த உதவியது.

    துணிந்து நடித்தார்

    துணிந்து நடித்தார்

    ஆனால், அதற்கு முன்பே மிகுந்த தைரியமாக ஒரு திரைப்படத்தை கமிட் செய்தார் அஜித். பெரும்பாலான ஹீரோக்கள், நடிக்க தயங்கும் ஒரு பாத்திரம் அது. தம்பி மனைவியை விரும்பும் கதாப்பாத்திரம் என்றால் எந்த வளரும் ஹீரோவும், ஏன் பெரிய ஹீரோவுமே எகிறி ஓடத்தான் பார்ப்பார்கள். ஆனால், துணிச்சலுக்கு பெயர் பெற்ற அஜித் அந்த கதாப்பாத்திரத்தை துணிந்து செய்தார். அந்த படம்தான் வாலி.

    திக்..திக்.. நெகட்டிவ்

    திக்..திக்.. நெகட்டிவ்

    இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில், அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இரு வேடங்களில் நடித்த அந்த திரைப்படம் பட்டையை கிளப்பியது. வாய் பேசாமலே அஜித் வெளிப்படுத்தும் வில்லத்தனம் திக்..திக்.. ரகமாக இருந்தது. அப்போதுதான் அஜித்துக்குள் இருந்த நெகட்டிவ் நடிப்பு திறமையை ரசிகர்கள் பார்த்தனர். மேலும், அதை ஆரவாரத்தோடு வரவேற்றனர். இதுதான் அஜித்துக்கு நெகட்டிவ் ரோலுக்கு பிள்ளையார் சுழி போட்ட திரைப்படம்.

    இரக்கமில்லா வில்லன்

    இரக்கமில்லா வில்லன்

    இதன்பிறகு அமர்க்களம், வில்லன், பில்லா, போன்ற திரைப்படங்களில், அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்து அவை பெரும் வரவேற்பை பெற்றன. மற்ற படங்களிலாவது, ஒரு அஜித் வில்லனாகவும், அதை ஈடுகட்ட மற்றொரு அஜித் நல்லவர் கேரக்டரிலும் நடித்தார். ஆனால், மங்காத்தா திரைப்படம் முழுக்க, முழுக்க சிங்கிள் ரோலில், இரக்கமற்ற நெகட்டிவ் ரோலில் நடித்தார். ஆனால், அந்த படம்தான், அவரின் முந்தைய படங்களைவிட அதிகமாக, வசூலில் பெரும் சாதனை படைத்தது.

    வேதாளத்திலும்..

    வேதாளத்திலும்..

    சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றிபெற்றுள்ள, வேதாளம் திரைப்படத்திலும், வேதாளம் கதாப்பாத்திரம், பணத்துக்காக எதையும் செய்யும் கேரக்டராக சித்தரிக்கப்பட்டது. ஆனால், குடும்ப ஆடியன்ஸை கருத்தில் கொண்டு வேதாளம் மனது ஈரம்மிக்கதாக காட்டப்பட்டதோடு, தங்கை சென்டிமென்ட்டும் கலக்கப்பட்டுள்ளது.

    தொடரும் அஜித் வேட்டை

    தொடரும் அஜித் வேட்டை

    அஜித் சாமானியனாக இருந்து, அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக மாறும் காட்சியில் காண்பித்த முகபாவங்கள், ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு சென்றது. இதனால், அஜித்தின் நெகட்டிவ் ரோல் படலங்கள் தொடரும் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

    ஜொலிப்பது பெரிய ஹீரோக்களே

    ஜொலிப்பது பெரிய ஹீரோக்களே

    அஜித்தைப்போலவே, நெகட்டிவ் கேரக்டர்களிலும் ஜொலித்த ஹீரோக்கள் மிக சொற்பமே. ஆனால் ஜொலித்தவர்கள் அத்தனை பேரும் மிகப்பெரிய ஹீரோக்கள் என்பதுதான் இதில் ஒற்றுமை. ஆம்.., கமல் மற்றும் ரஜினி ஆகிய இரு பெரும் ஹீரோக்களுமே நெகட்டிவ் ரோல்களில் முத்திரை பதித்த நடிப்புக்கு சொந்தக்காரர்கள்தான்.

    ரஜினியின் அவதாரம்

    ரஜினியின் அவதாரம்

    மூன்று முடிச்சு, 16 வயதினிலே போன்ற படங்களில் ரஜினி காட்டிய வில்லன் முகத்தை சினிமா ரசிகர்களால் அத்தனை எளிதாக மறந்துவிட முடியாது. அவ்வளவு ஏன், சமீபத்தில் வெளியான எந்திரன் திரைப்படத்தில், ஹீரோ வசிகரன் கேரக்டரை அப்படியே தூக்கிச் சாப்பிட்டதே வில்லன் ரோபோ ரஜினி கதாப்பாத்திரம். சந்திரமுகியில், வேட்டையன் கேர்கடர்தானே, அந்த படத்தின் பலம். ஆனால் ரஜினியை முழுக்க, முழுக்க நல்லவராக காட்டப்பட்ட லிங்கா வசூலில் கோட்டைவிட்டதே.

    கமலுக்கு சொல்ல வேண்டுமா

    கமலுக்கு சொல்ல வேண்டுமா

    அதேபோல, நடிப்பின் இமயமாக உருவாகியுள்ள கமல்ஹாசனின், சிகப்பு ரோஜாக்கள் கேரக்டரை மறந்துவிட முடியுமா. அப்படி ஒரு கேரக்டர் கிடைக்காதா என்று ஏங்கும் ஹீரோக்கள் பலர் உள்ளனரே. தீவிரவாதிகளின் கூடவே இருந்து கழுத்தறுக்கும், விஸ்வரூபம் கமல் கேரக்டரும் பிரமாதமாக வந்திருந்ததே.

    நடிப்பு வேண்டும்

    நடிப்பு வேண்டும்

    கமல், ரஜினி, அஜித் தவிர்த்து பெரும்பாலான ஹீரோக்களுக்கு நெகட்டிவ் கேரக்டர்கள் நடிக்கும் துணிவு இல்லை. அப்படியே நடித்தாலும், அந்த கேரக்டர் தன்மையை பூர்த்தி செய்யும் நடிப்பை அவர்களால் தர முடியவில்லை. இதற்கு உதாரணம், அழகிய தமிழ் மகனில் ஒரு விஜய் கதாப்பாத்திரம், நெகட்டிவ் ரோலில் நடித்தும் ரசிகர்கள் அதை ஏற்காமல் புறக்கணித்துவிட்டனர்.

    சிம்பு முயன்றார்

    சிம்பு முயன்றார்

    மன்மதன் திரைப்படத்தில் சிம்பு ஏற்ற நெகட்டிவ் கதாப்பாத்திரம் பரபரப்பாக பேசப்பட்டது, படமும் ஹிட் அடித்தது. ஆனால், சிகப்பு ரோஜாக்களின் அப்பட்ட பாதிப்பால் உருவான திரைப்படம் அது என்பதால், கமலுக்கு கிடைத்த தனித்துவம் சிம்புக்கு கிடைக்காமல்போய்விட்டது. நடிகர் சத்யராஜ் வில்லனாக இருந்து கதாநாயகனாக வளர்ந்தவர் என்பதால் அவருக்கு அனைத்து நடிப்பும் அத்துப்படியாக உள்ளது.

    நிறைய எதிர்பார்க்கலாம்

    நிறைய எதிர்பார்க்கலாம்

    அஜித்தின் இந்த வெற்றி பார்முலாவை பின்பற்றி ஹிட் அடிக்க முடியுமா என்று பிற ஹீரோக்களும் எண்ணத்தொடங்கியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.

    English summary
    As Ajith gets huge response from the audience, he has been appears in negative roles in many movies on nowadays.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X