ஓட்டுப்போட சென்னை திரும்பிய அஜித்.. விஜய்யின் விசில் சின்னத்துக்கு போடுவாரா?.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
சென்னை: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருந்தாலும், ஜனநாயக கடமை என வந்து விட்டால் காலங்காத்தாலே வரிசையில் நின்று வாக்கு செலுத்தி விடுவார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜித் குமார், விஜய் என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
அஜித் குமார் மற்றும் விஜய் இருவரும் சினிமாவில் போட்டி நடிகர்களாக பல ஆண்டுகள் இருந்து வந்தாலும், பல தருணங்களில் நல்ல நண்பர்கள் என்பதை பல முறை வெளிப்படுத்தியுள்ளனர்.

விஜய்க்கு எதிராக பல நடிகர்கள் அரசியல் கருத்துக்களை பேசினாலும், இதுவரை எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு தெரிவித்தோ, எதிர்ப்பு தெரிவித்தோ அஜித் அரசியல் பேசாமல் தனது தனி வழியில் பயணித்து வரும் நிலையில், இந்த முறை அவரது நண்பரும் சினிமா போட்டியாளருமான விஜய் அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில், அவருக்கு ஓட்டுப் போடுவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை வந்த அஜித் குமார்: விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியல் பக்கம் வந்துவிட்டார். அஜித் குமார் சிறு வயதில் இருந்தே தனக்கு இருந்த ரேஸர் கனவை நனவாக்க சினிமாவுக்கு சின்னதாக பிரேக் விட்டு கார் பந்தயங்களில் அசத்தி வருகிறார். துபாயில் போர் பதற்றம் நிலவி வந்த சூழலிலும் சென்னை திரும்பாத அஜித் குமார் நாளை தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சென்னை திரும்பியுள்ளார். விமான நிலையத்தில் இருந்து அஜித் வெளியேறும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
அஜித்தை சுற்றி அரசியல்: அஜித் குமார் அரசியலில் அதிக ஆர்வம் காட்டாமல் இருந்தாலும், அவரை சுற்றியே அரசியல் நடைபெற்று வருகிறது. அதிலும், இந்த முறை விஜய் களத்தில் உள்ள நிலையில், அதிமுக, திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் அஜித் குமார் வந்தால் விஜய்யை விட அதிக கூட்டம் வரும் என்று பிரச்சாரம் செய்ததை தெளிவாக பார்க்க முடிந்தது. விஜய்யின் பரப்புரைகளின் போதும் அஜித், விஜய் இருக்கும் போட்டோ ஃபிரேம்களை தொண்டர்கள் கொடுக்க விஜய் வாங்கிக் கொண்டார்.
விஜய்யின் விசில் சின்னத்துக்கு ஓட்டுப்போடுவாரா?: வாக்களிப்பது அவரவர் தனிப்பட்ட உரிமை. இந்த கட்சிக்குத்தான் ஓட்டுப்போட வேண்டும் என யாரும் கட்டாயப்படுத்த முடியாது. விஜய்க்கு ஓட்டுப்போடவே மாட்டோம் என ரஜினிகாந்த், அஜித் குமார் ரசிகர்கள் என சிலர் வெளிப்படையாக சோஷியல் மீடியாவில் வெறுப்பை பரப்பி வருகின்றனர். அஜித் குமார் தனது நண்பர் விஜய்க்கு ஆதரவு கொடுத்தால் நல்லா இருக்கும் என விஜய் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். நாளை நடைபெறும் தேர்தலில் அதிகப்படியான வாக்குப்பதிவு நடைபெறுமா? மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்களா? எத்தனை சதவீதம் வாக்குகள் விஜய்க்கு கிடைக்கப் போகிறது என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம். வரும் ஏப்ரல் 24ம் தேதி அஜித், ஷாலினி நடித்த அமர்க்களம் படமும் ரீ ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications