For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சென்னை டூ டெல்லி... ஸ்டையிலாக நீண்ட பைக் ட்ரிப்பை துவக்கிய அஜித்

  |

  சென்னை : டாப் மாஸ் ஹீரோவான அஜித்திற்கு பைக், கார் ஓட்டுவது, ஃபோட்டோகிராபி மீது தீராத காதல் இருப்பது அனைவருக்கும் தெரியும். சமீபத்தில் ரஷ்யாவின் வலிமை படத்தின் இறுதிக்கட்ட ஷுட்டிங்கை முடித்த பிறகு, அங்கு நீண்ட பைக் ட்ரிப் சென்று விட்டு தான் இந்தியா வந்தார்.

  இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்....புத்தகமான எஸ்பிபி.,யின் இசை வாழ்க்கை இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்....புத்தகமான எஸ்பிபி.,யின் இசை வாழ்க்கை

  வலிமை படத்தின் Glimpse டீசர் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இரண்டு நாட்களில் 6.3 மில்லியன் பார்வைகளை பெற்று இந்த வீடியோ யூட்யூப்பில் மற்றொரு சாதனையை படைத்துள்ளது. ஏற்கனவே வலிமை ஃபஸ்ட் சிங்கிளாக வெளியான நாங்க வேற மாரி பாடல் யூட்யூப்பில் 25 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்தது.

  Maral Yazarloo வை சந்தித்த அஜித்

  Maral Yazarloo வை சந்தித்த அஜித்

  வலிமை Glimpse வெளியாவதற்கு முன்பே, மீடியாக்களில் அஜித் பற்றிய தகவல் தான் உலா வந்தது. அதற்கு காரணம் பைக்கிலேயே 7 கண்டங்கள், 64 நாடுகளை சுற்றி வந்த சாதனைப் பெண் Maral Yazarloo வை டெல்லியில் அஜித் சந்தித்தது தான். இதை ட்விட்டரில் பகிர்ந்த அஜித்தின் மேனேஜர், பைக்கிலேயே உலகை சுற்றி வர அஜித் திட்டம் வைத்திருப்பதாக வெளியிட்டார்.

  பைக் ட்ரிப் கிளம்பிட்டார்

  பைக் ட்ரிப் கிளம்பிட்டார்

  Maral Yazarloo வை சந்தித்த அஜித், பைக் பயணம் பற்றிய அனுபவங்களையும், ஆலோசனைகளையும் கேட்டு தெரிந்து கொண்டுள்ளார். இதைக் கேட்டு விட்டு சென்னை திரும்பிய கையோடு, நீண்ட பைக் ட்ரிப்பை துவக்கி உள்ளார் அஜித். இந்த ஃபோட்டோக்கள் சோஷியல் மீடியாவில் பரவி வைரலாகி வருகிறது.

  வைரலாகும் ஃபோட்டோ

  வைரலாகும் ஃபோட்டோ

  தனது ஃபேவரைட் பைக்கில், தேவையான பொருட்கள் அடங்கிய கிட் உடன் சென்னை டூ டெல்லி பைக் ட்ரிப் கிளம்பி உள்ளார் அஜித். இதற்கு முன் சென்னை டூ கொல்கத்தா பைக் ட்ரிப்பை அஜித் மேற்கொண்டார். இப்படி ட்ரிப் போவது அஜித்திற்கு புதிதில்லை என்றாலும் இதை அஜித் ரசிகர்கள் வேகமாக பகிர்ந்து, வைரலாக்கி வருகின்றனர்.

  மீம்ஸ் கூட வருது

  மீம்ஸ் கூட வருது

  வலிமை Glimpse கொண்டாட்டமே இன்னும் முடியவில்லை, அதற்குள் அஜித்தின் இந்த பைக் ட்ரிப்பை அவரது ரசிகர்கள் கொண்டாட துவங்கி விட்டனர். அஜித்தின் அனல் பறக்கும் பைக் ரேஸ் காட்சிகள் அடங்கிய வலிமை glimpse ஐ பார்த்த கையோடு, இந்த பைக் ட்ரிப்பையும் ஒப்பிட்டு சிலர் மீம்ஸ் உருவாக்கி உள்ளனர்.

  தளபதி Vijay படத்துல Work பண்ணனும்னு ஆசை | Costume designer Vasuki Bhaskar part-02 | Filmibeat Tamil
  பொங்கல் ரிலீஸ்

  பொங்கல் ரிலீஸ்

  வலிமை படத்தில் சட்ட விரோத பைக் ரேஸிக்கு எதிரான போஸ் அதிகாரி அர்ஜுன் கேரக்டரில் தான் அஜித் நடித்துள்ளார். வில்லனான கார்த்திகேயா, பைக் ரேஸ் டீமின் தலைவராக இருக்கிறார் என்பதும் வலிமை glimpse ல் தெளிவாக தெரிகிறது. 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு வலிமை படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  பீஸ்ட் அறிவிப்பு எப்போது

  பீஸ்ட் அறிவிப்பு எப்போது

  பொங்கல் ரேஸில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ள முதல் தமிழ் சினிமா வலிமை தான். விஜய்யின் பீஸ்ட் படம் பொங்கலுக்கு ரிலீசாவதாக கூறப்பட்டாலும், இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பீஸ்ட் படத்தின் ஷுட்டிங் டெல்லியில் தொடர்ந்து நடந்து வருகிறது. படத்தின் ஷுட்டிங் முழுவதுமாக முடிவடைந்த பிறகு தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ரிலீஸ் தேதியை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  English summary
  After meeting Maral Yazarloo, Ajith is on a bike trip from Chennai to Delhi on his favorite bike with a kit containing the necessary items. Before this, Ajith took a bike trip from Chennai to Kolkata. Although this trip is not new to Ajith, Ajith fans are rapidly sharing and viralizing it. 2 days back Ajith's Valimai glimpse released and received mass response.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X