வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை… அந்த புல்லட்: மாஸ் காட்டப்போகும் அஜித்
சென்னை: விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித் பெரும்பான்மையான காட்சிகளில் எப்படி இருப்பார் என தெரியவந்துள்ளது.
சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக அஜித் கூட்டணி சேர்ந்துள்ள படம் விஸ்வாசம். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்பது தெரிந்த விஷயம். வயதான சால்ட் அன்ட் பெப்பர் லுக்கிலும், இளைஞராகவும் நடிக்கிறார். அதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் "தூக்கு துரை" என சொல்லப்படுகிறது.
சால்ட் அன்ட் பெப்பர் லுக் வேடத்தில் இருக்கும் அஜித், எப்போதும் மாசாக வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையில் இருப்பாராம். பொதுவாக பைக், கார் ஓட்டுவதில் வல்லவரான அஜித், வின்டேஜ் ஸ்டைல் புல்லட் ஓட்டுவாராம். பெரும்பாலான காட்சிகளில் புல்லட்டில் வருவார் என சொல்லப்படுகிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். இவர்களுடன், ரோபோ சங்கர், யோகிபாபு, ரமேஷ் திலக், தம்பி ராமையா, விவேக், கோவை சரளா மற்றும் பலர் நடிக்கின்றனர். பொங்கலுக்கு இப்படம் ரிலீசாகிறது.


Click it and Unblock the Notifications











