Ajith: “டெய்லி ஒரு போட்டோ.. மத்தபடி பப்ளிசிட்டி பிடிக்காது..” அஜித்தை பங்கம் செய்த ப்ளூ சட்டை மாறன்
சென்னை: விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள அஜித், அங்கு ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தினமும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் அஜித்தின் பப்ளிசிட்டி குறித்து ப்ளூ சட்டை மாறன் பங்கமாக கலாய்த்துள்ளார்.
அஜித்தின் பப்ளிசிட்டி டெக்னிக்
கோலிவுட்டின் மாஸ் ஹீரோவான அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு சூப்பர் ஹிட் அடித்தது. இதனால் தற்போது விடாமுயற்சி படத்துக்கும் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிக்கும் இந்தப் படம் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கும் விடாமுயற்சி படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. அஜர்பைஜான் தவிர மற்ற லொக்கேஷன்களில் விடாமுயற்சி படப்பிடிப்பு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் விரைவில் இந்தியாவிலும் சில காட்சிகளை ஷூட் செய்ய மகிழ் திருமேனி முடிவு செய்துள்ளாராம்.
இந்நிலையில், இதுவரை விடாமுயற்சி படத்தில் இருந்து அபிஸியல் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. ஆனால், தினமும் அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின்றன. விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெறுவதை அறிந்த ரசிகர்கள், அஜித்தை சந்திப்பதற்காக அங்கு சென்று வருகின்றனர். இதனால் தன்னை சந்திக்க விரும்பும் ரசிகர்களை ஏமாற்றாமல் அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொள்கிறார் அஜித்.
ஆனால், அஜித் கடந்த சில ஆண்டுகளாகவே தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுப்பதோ, அல்லது தனது படங்களின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதோ கிடையாது. முக்கியமான சினிமா நிகழ்ச்சிகளில் கூட அஜித்தை பார்க்க முடியாது. அந்தளவிற்கு பப்ளிசிட்டி செய்ய விரும்பாமல் தனித்தே வலம் வருகிறார் அஜித். ஆனால், தற்போதெல்லாம் அடிக்கடி அஜித்தின் புகைப்படங்கள் அதிகளவில் வெளியாகின்றன.
சமீபத்தில் ஆரவ் உடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகின. அதேபோல், அஜித்தின் லேட்டஸ் போட்டோவை அவரது மனைவி ஷாலினியும் தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்திருந்தார். இந்நிலையில் அஜித்தின் இந்த போட்டோ பப்ளிசிட்டியை ப்ளூ சட்டை மாறன் பங்கமாக கலாய்த்துள்ளார். இதுபற்றி ட்வீட் செய்துள்ள அவர், ”தமிழ் சினிமாவில் பப்ளிசிட்டியை விரும்பாத ஒரே நடிகர். டெய்லி ஒரு ஃபோட்டோ மட்டும் ரிலீஸாகும். மத்தபடி சத்தியமா பப்ளிசிட்டி பிடிக்காது” என பதிவிட்டுள்ளார்.
அதாவது தமிழ் சினிமாவில் அஜித் மட்டும் தான் பப்ளிசிட்டியை விரும்ப மாட்டார். ஆனால் தினமும் ஒரு போட்டோ மட்டும் ரிலீஸ் செய்து சீன் போடுவார் என்பதாக கலாய்த்துள்ளார். பொதுவாகவே அஜித்தின் பல நல்ல குணங்களை பாராட்டுவது தான் ப்ளூ சட்டை மாறனின் வழக்கம். இந்தமுறை கொஞ்சம் இறங்கி அடித்துள்ளார் என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











