Ajith - வீடியோ எடுத்த ரசிகர்.. டென்ஷனான அஜித் என்ன செய்தார் தெரியுமா?.. ரொம்ப டெரரா இருக்காரே
சென்னை: நடிகர் அஜித்குமார் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்க மகிழ் திருமேனி இயக்குகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததன் காரணமாக இந்தப் படத்தையும் ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் உழைத்துவருகிறார் அஜித்குமார்.
தமிழ் சினிமாவின் டாப் 3 ஹீரோக்களில் ஒருவரான அஜித்குமார் கடைசியாக துணிவு படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்தது. எப்போதும் ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு அடுத்த படத்தில் கமிட்டாகும் அஜித்குமார் தன்னுடைய 62ஆவது படத்தில் துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே கமிட்டானார். அதனை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் படத்தின் இரண்டாம் பாதி தயாரிப்பு தரப்புக்கு திருப்தி இல்லாததால் அதிலிருந்து வெளியேறினார்.

விடாமுயற்சி: விக்னேஷ் சிவன் வெளியேறிய பிறகு அஜித் 62அவது படத்தை இயக்குவதற்கு மகிழ் திருமேனி கமிட்டானார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. பெயர் அறிவிக்கப்பட்டதோடு சரி; அதற்கு பிறகு வேறு எந்த அப்டேட்டும் இதுவரை படத்திலிருந்து வெளியாகவில்லை. ஆகினும் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளராக ஓம் பிரகாஷ் பணியாற்றுகிறார். ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தை விரைவில் முடித்து இந்த வருட கோடை விடுமுறைக்கோ அல்லது தீபாவளிக்கோ ரிலீஸ் செய்ய மகிழ் திருமேனி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. அதற்காக மும்முரமாக உழைத்து வருகிறார்.
குட்டி பிரேக் எடுத்த அஜித்: அஜித்தும் மும்முரமாக நடித்துவந்த சூழலில் தற்போது அவர் குட்டி பிரேக் எடுத்திருக்கிறார். அஜித் பிரேக் எடுத்தாலும் மற்றவர்களை வைத்து பிற போர்ஷன்களை எடுத்துவருகிறார் மகிழ் திருமேனி. தனது மகனின் பிறந்தநாள் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக அஜித் ஷூட்டிங்கிலிருந்து இப்போது பிரேக் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ஷாலினி, அனௌஷ்கா, ஆத்விக் ஆகியோர் இப்போது துபாயில் இருக்கின்றனர். அவர்களுடன் அஜித் நேரத்தை செலவழித்துவருகிறார்.
வெளியான வீடியோ: துபாயில் என்ஜாய் செய்துவரும் அஜித் தனது குடும்பத்தினருடன் சொகுசு படகில் சென்றபோது அவரை தல என்று அழைத்த ரசிகர்களை பார்த்து கையசைத்த வீடியோ வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது. அதேபோல் ஒரு ரசிகையுடன் சிம்ப்பிளாக அவர் நடனம் ஆடிய வீடியோவும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது. அதனை பார்த்த ரசிகர்கள் நம்ம ஏகேவா இது. இவ்வளவு ஜாலியா இருக்காரே என்று ஆச்சரியம்தான் பட்டனர்.
டெலிட் செய்த அஜித்: இந்நிலையில் துபாயிலிருந்து இன்னொரு வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் ரசிகர் ஒருவர் அஜித்தை வீடியோ எடுக்கிறார். அதனை கவனித்துவிட்ட அஜித்குமார் அந்த ரசிகரிடம் சென்று மொபைல் ஃபோனை வாங்கி எடுக்கப்பட்ட வீடியோவையோ, புகைப்படத்தையோ டெலிட் செய்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்ஸ் அந்த ரசிகர் அப்படி என்ன தவறாக செய்துவிட்டார் என கேள்வி எழுப்புகின்றனர். அதேசமயம் தன் குடும்பத்தினருடன் இருக்கும்போது அந்த ரசிகர் ஏன் இந்த வேலையை செய்தார். அதனால்தான் ஏகே டென்ஷனாகி அப்படி நடந்துகொண்டனர் என்று கூறிவருகின்றனர்.
இதற்கிடையே விஜயகாந்த் மறைவுக்கு அஜித்குமார் நேரில் வரவில்லை. அதனையும் கவனித்த ரசிகர்கள் சக நடிகர் இறந்து போனதற்கு வராத அஜித் துபாயில் குதூகலமாக இருக்கிறார். இதனை அவர் தவிர்த்திருக்கலாம் என்றும் கூற ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











