சில்வர் கலர் ஏப்ரிலியாவில் ரேஸ் சூட் போட்டு யாராவது சென்றால் அது கண்டிப்பாக 'தல' தான்!
சென்னை: அஜீத் குமார் மேலும் ஒரு சூப்பர் பைக் வாங்கியுள்ளார்.
அஜீத் குமாருக்கு ரேஸ் பைக் என்றால் கொள்ளைப் பிரியம். படங்களில் கூட பைக் சாகச காட்சிகளில் நடிக்க மிகவும் பிரியப்படுவார். ஆரம்பம் படத்தில் டுகாட்டி பைக்கில் சாகசம் செய்துள்ளாராம்.
அவர் டுகாட்டி ஓட்டுவது போன்ற புகைப்படங்களைத் தான் தற்போதைக்கு பார்க்க முடிந்துள்ளது. பைக் பிரியரான அவர் ரேஸிங் பைக் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்.

பிஎம்டபுள்யூ
அண்மையில் தான் அஜீத் குமார் பிஎம்டபுள்யூ எஸ்1000ஆர்ஆர் என்ற ஸ்போர்ட்ஸ் பைக்கை வாங்கினார்.

சென்னை-பெங்களூர் பயணம்
அஜீத் தனது பிஎம்டபுள்யூ பைக்கில் ரேஸ் சூட் போட்டு சென்னையில் இருந்து பெங்களூருக்கு சென்றார். சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த பயணம் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் ஒன்று
பிஎம்டபுள்யூ பைக்கை அடுத்து அஜீத் தற்போது ஏப்ரிலியா கேபநார்ட் என்னும் 1197 சிசி பைக்கை வாங்கியுள்ளார்.

சில்வர் கலர்
சில்வர் கலர் ஏப்ரிலியாவில் ரேஸ் சூட் போட்டு யாராவது சென்னை ரோடுகளில் சென்றால் அது கண்டிப்பாக 'தல' தான்.


Click it and Unblock the Notifications











