ஷாலினிக்கு சூப்பரான பரிசு கொடுத்த அஜித்.. இதுதான் அந்த சர்ப்ரைஸா.. அவர் லுக்கை பார்த்தீங்களா

சென்னை: ஐபிஎல் தொடரின் 43ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்நிலையில், இன்று சென்னையில் நடக்கும் போட்டியை நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் வந்து கண்டு களிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதில், நடிகர் சிவகார்த்திகேயனும் அஜித்துடன் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை கண்டு களித்தார்.

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. குட் பேட் அக்லி படம் வெளியான நேரத்தில் கார் பந்தயத்தில் கலந்துகொண்ட அஜித் உலக அளவில் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறார். பெல்ஜியம் நாட்டில் உள்ள புகழ்பெற்ற Spa Francorchamps சர்கியூட்டில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித்தின் அணி இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தது. இதனையறிந்த அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள், இதனிடையே, நேற்று தனது கல்யாண நாளை மனைவி ஷாலினியுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

ajith-came-to-watch-the-ipl-cricket-match-to-wedding-anniversary-wish-for-shalini

கொண்டாட்டம்: அஜித்தும் ஷாலினியும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு ஆத்விக் என்ற மகனும் அனுஷ்கா என்ற மகளும் உள்ளனர். இவர்களது திருமண நாளை மிகவும் சிம்பிளாக வீட்டிலேயே கேக் வெட்டி கொண்டாடினார்கள். இதுதொடர்பான வீடியோவை ஷாலினி தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதற்கு திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். கல்யாண நாளை கொண்டாடும் விதமாக இன்று சென்னையில் ஐபிஎல் போட்டியை குடும்பத்துடன் காண வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. போட்டியின் நடுவே நடிகர் அஜித்தின் வருகையை கண்டு அரங்கமே அதிர்ந்தது. அஜித் ரசிகர்களை பார்த்து சிரித்தபடி கை அசைத்தார். ரசிகர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்தார்கள்.

சிவகார்த்திகேயனுடன் சந்திப்பு: பின்னர் நடிகர் சிவகார்த்திகேயன் அஜித் மற்றும் ஷாலினியை சந்தித்து புகைப்படம் எடுத்துகொண்டார். அப்போது சிவகார்த்திகேயனும் அஜித் பக்கத்தில் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை கண்டு களித்தார். இதுதொடர்பான வீடியோக்களும் வைரலானது. இதேபோன்று நடிகை ஸ்ருதிஹாசனையும் அஜித் சந்தித்து பேசியிருக்கிறார். போட்டியை காண வருவதற்கு முன்பு ஸ்ருதிஹாசன் அஜித்திற்காக காத்திருந்தார். அப்போது இருவரும் பேசிக்கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது. மேலும், சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் இருந்து அஜித் மாறியிருப்பதையும் உற்று கவனிக்க வேண்டியிருக்கிறது.

புதிய படம்: குட் பேட் அக்லி படம் முழுக்க அஜித் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து அவர் கலந்துகொண்ட கார் பந்தயங்களிலும் அவ்வாறே காணப்பட்டார். இந்நிலையில், தலைக்கு டை அடித்து புதிய லுக்கில் அஜித் தோற்றமளித்து வருகிறார். இந்த தோற்றம் புதிய படத்திற்கான கெட்டப்பாக இருக்கும் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சமீபத்தில் புஷ்பா 2 பட இயக்குநர் சுகுமார் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. அவரிடம் கதை கேட்டிருப்பதாக தெரிகிறது. எனவே, புதிய படத்தின் லுக் டெஸ்டிற்காக அஜித் டை அடித்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் இப்படம் உருவாக இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. எனவே விரைவில் இதுகுறித்த அறிவிப்பும் வரலாம் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும், சென்னை சேப்பாக்கத்தில் அஜித்தை காண ரசிகர்கள் குவிந்திருக்கும் வீடியோ மூச்சு முட்ட வைத்திருக்கிறதாம். இதுதொடர்பான வீடியோவும் வெளியாகியிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X