twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உதவப்போகும் அஜித்தின் தக்‌ஷா குழு

    |

    சென்னை: அஜித்தின் தக்‌ஷா குழு தீபாவளி பாதுகாப்பு பணிகளுக்கு உதவ உள்ளது.

    அஜித் ஆலோசனைப்படி எம்.ஐ.டி மாணவர்கள் உருவாக்கிய தக்‌ஷா ட்ரோன் ஆஸ்திரேலியாவில் நடந்த யுஏவி மெடிகல் எக்ஸ்பிரஸ் சர்வதேச போட்டியில் இரண்டாவது இடம் பிடித்தது.

    Ajith Daksha team in Chennai safety

    மருத்துவ சேவைக்கு உதவும் நோக்கத்தில் தக்‌ஷா ட்ரோன் உருவாக்கப்பட்டது. தக்‌ஷா ட்ரோனை உருவாக்கிய குழுவினர் தற்போது தீபாவளி பாதுகாப்பு பணிகளுக்கு உதவ உள்ளனர்.

    தியாகராய நகர் எப்போதுமே கூட்ட நெரிசல் மிகுந்த பகுதி. இப்போது தீபாவளி பண்டிகைக் காலம் என்பதால், மக்கள் கூட்டம் அலைமோதும். அதை பயன்படுத்திக்கொண்டு சமூக விரோதிகள் திருட்டு வேலைகளில் ஈடுபட வாய்ப்புள்ளது.

    அவற்றைத் தடுப்பதற்காக ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏகே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதற்கான பணிகளில் தக்‌ஷா குழுவினர் உதவ உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதற்காக ஆர் 1 காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு மையத்தை திறந்துவைத்த அவர், குற்றவாலிகளின் முகத்தை எளிதில் அடையாளம் காணும் வகையில் கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    English summary
    Ajith Daksha drone team is set to support Chennai city police on surveillance.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X