மங்காத்தாவில் ஒரு 'வரலாறு'

By Sudha

வரலாறு படத்தில் வயதான கெட்டப்பில் கலக்கியதைப் போல மங்காத்தா படத்திலும் ஒரு வயதான பாத்திரத்தில் வருகிறாராம் அஜீத்.

வெங்கட் பிரபு இயக்க, அஜீத் நடிக்கும் முற்றிலும் வித்தியாசமான திரைப்படம் மங்காத்தா. இப்படத்தில் அஜீத் நடிப்பது தெரியும். ஆனால் ஒரு வயதான பாத்திரத்திலும் அவர் வருகிறார் என்பது புதிய செய்தி.

வரலாறு படத்தில் அஜீத் வித்தியாசமான மூன்று பாத்திரங்களில் அசத்தியிருந்தார். அதில் வயதான கெட்டப்பும் ஒன்று. அதேபோன்ற பாத்திரத்தில் மங்காத்தாவிலும் சில காட்சிகளில் வருகிறாராம் அஜீத். இந்த பாத்திரமும் வரலாறு போல வெகுவாக பேசப்படுமாம்.

அசல் படத்திலும் வயதான கெட்டப்பில் நடித்திருந்தார் அஜீத். ஆனால் வரலாறு படம்தான் அஜீத்துக்கு பெரும் பெயரை வாங்கிக் கொடுத்தது.

மங்காத்தா படத்தில் அஜீத் ஏற்றுள்ள வயதான பாத்திரம் குறித்த தகவல்களை படு ரகசியமாக வைத்துள்ளனராம். ஆனால் ரகசியம் என்றாலே அது எப்படியாவது கசிந்து விடுவது இயல்புதானே. அந்த அடிப்படையில் இந்த வயதான அஜீத் பாத்திரம் குறித்த தகவலும் கோலிவுட்டை வலம் வர ஆரம்பித்துள்ளது.

எப்படியோ நல்லா நடிச்சா சரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X