தல ரசிகாஸ் பாசக்காரங்க தான், அதற்காக இப்படியா? #ViswasamFirstLook
Recommended Video

சென்னை: விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் வெளியான வேகத்தில் ரசிகர் ஒருவர் அதை தனது கையில் பச்சை குத்தியுள்ளார்.
சிவா இயக்கத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. ஃபர்ஸட் லுக் போஸ்டரில் இளம் அஜித், வயதான அஜித் என்று இரண்டு கெட்டப்பில் உள்ளார் தல.
அஜித் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அருமை என்று கொண்டாடுகின்றனர்.
ரசிகன்
விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் வெளியான வேகத்தில் அஜித் ரசிகர் ஒருவர் அதை தனது கையில் பச்சை குத்தியுள்ளார். தல மீது பாசம் வைத்திருப்பது தெரிகிறது, அதற்காக இப்படியா?. இதை அஜித்தே விரும்பமாட்டார். தன்னால் தன் ரசிகர்கள் யாரும் கஷ்டப்படுவது அவருக்கு பிடிக்காது.
அஜித்
மதுரைக்காரங்க பாசக்காரங்க என்பது தெரிந்த விஷயம். ஃபர்ஸ்ட் லுக் வெளியான வேகத்தில் போஸ்டர் அடித்து ஒட்டிட்டாங்கய்யா

எதிர்பார்ப்பு
விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் இரவு 3.40 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்ததால் இரவு முழுவதும் தூங்காமல் இருந்துள்ளனர் அஜித் ரசிகர்கள். ஃபர்ஸ்ட் லுக் வெளியானவுடன் போஸ்டர் அடிக்கும் வேலையை துவங்கிவிட்டனர்.
தெறிக்குது
விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்து ட்விட்டரை தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். #ViswasamFirstLook என்ற ஹேஷ்டேக் இந்தியா அளவில் ட்விட்டரில் முதலிடத்தில் டிரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











