அதிருப்தியில் ஆழ்ந்த அஜித் ரசிகர்கள்
விஸ்வாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று அதிகாலை 3.40 மணியளவில் வெளியானது. அதை பார்த்து சந்தோஷம் அடைந்த அஜித் ரசிகர்கள், அதே சமயத்தில் அதிருப்தியும் அடைந்துள்ளனர்.
Recommended Video

சென்னை: அஜித் தற்போது நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று அதிகாலை 3.40 மணியளவில் வெளியானது. அதை பார்த்து சந்தோஷம் அடைந்த அஜித் ரசிகர்கள், அதே சமயத்தில் அதிருப்தியும் அடைந்துள்ளனர்.
ஏற்கனவே அஜித் தொடர்ந்து டைரக்டர் சிவா இயக்கத்தில் நடித்து வருவதை பெரிதும் அவர் ரசிகர்கள் விரும்பவில்லை. ஆனாலும் அஜித் என்ற ஒரு மனிதருக்காக அதை பெரிதும் வெளிக்காட்டி கொள்ளவில்லை.

இந்நிலையில் சிவா இயக்கத்தில் தற்போது அஜித், நயன்தாரா நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் விஸ்வாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை பார்த்த அஜித் ரசிகர்கள், ஒரு பக்கம் சந்தோஷம் அடைந்தாலும் மறுபக்கம் அதிருப்தியில் உள்ளனர்.
அதற்கு என்ன காரணம் என்று கேட்டால் நாங்கள் தலயை இந்த படத்தில் எப்படியெல்லாமோ கற்பனை பண்ணி காத்திருந்தோம். ஆனால், இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் எங்களை சிறிது கவலைப்படுத்தியுள்ளது. இந்த போஸ்டரில் அப்பா அஜித், மகன் அஜித்துனு, தல ரெண்டு கெட்டப்புல இருக்காரு, இருந்தாலும் ரெண்டுத்துக்கும் பெருசா வித்தியாசம் ஒண்ணும் எங்களுக்கு தெரியவில்லை. கருப்பு முடி, வெள்ளை முடி என ஒரே வித்தியாசம் தான் இருக்கிறது. இதனால் எங்களுக்கு கொஞ்சம் அதிருப்தியாக உள்ளது என்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.
இவர் வயதில் இருக்கும் பல நடிகர்கள் தங்கள் வயதைவிட குறைந்த வயதுபோல் தங்களை காண்பித்துக்கொள்ளும் நிலையில், அஜித்தை பலவிதமாக பார்க்க வேண்டும் என்று நினைக்கும் அவரின் ரசிகர்களுக்காக, தன் ஒயிட் ஹேர் கொள்கையை கொஞ்சம் அஜித் விட்டுக்கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று விரும்புகிறார்கள் அஜித் ரசிகர்கள்.
அதே சமயத்தில் அவரின் ரசிகர்கள் எல்லா இயக்குநர்களிடமும் கேட்டுக்கொள்வது, என்னவென்றால், உங்களுக்கு தன் உழைப்பை பரிசாக கொடுக்கும் ஒரு அஜித் போன்ற நடிகன் கிடைக்கும் போது, அவர்க்கு தகுந்தாற்போல் கதை அமைத்தால் நன்றாக இருக்கும் என கருதுகின்றனர்.


Click it and Unblock the Notifications











