ஸ்லிம் லுக்கில், செம ஸ்டைல் அஜித்.. டிரெண்டாகும் #Valimai ஹேஷ்டேக்.. தெறிக்கவிடும் ரசிகர்கள்!
சென்னை: நடிகர் அஜித்தின் புதிய ஸ்லிம் லுக் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இப்போது 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார், நடிகர் அஜித். ஹெச். வினோத் இயக்குகிறார்.
இதன் ஷூட்டிங் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டு இருந்தது. லாக்டவுனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

மீண்டும் தொடங்கியது
வலிமை பட ஷூட்டிங்கும் சென்னையில் சில நாட்களுக்கு முன் மீண்டும் தொடங்கியது. அதில், வில்லன் நடிகர் கார்த்திகேயா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அஜித் பங்கேற்காத காட்சிகளை அங்கு படமாக்கினர். இந்நிலையில், இந்தப் படத்தின் ஷூட்டிங் ஐதராபாத், ராமோஜிராஜ் பிலிம்சிட்டியில் மீண்டும் தொடங்கியுள்ளது.

வலிமை அஜித்
இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இங்குதான் நடந்தது. பிறகு சென்னையில் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வலிமை ஷூட்டிங்கில் நடிகர் அஜித்குமார் கடந்த சில நாட்களுக்கு முன் கலந்துகொண்டார். கொரோனாவுக்கு பிறகு அவர் முதன்முறையாக படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.

போலீஸ் அதிகாரி
படத்தின் ஹீரோயின் ஹூமா குரேஸி, கார்த்திகேயா ஆகியோரும் இந்த ஷெட்யூலில் பங்கேற்கிறார்கள். தகுந்த முன்னெச்சரிக்கையுடன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

செம ஸ்லிம் அஜித்
இந்நிலையில், ஐதராபாத்தில் சில ரசிகர்களை நடிகர் அஜித் சந்தித்துள்ளார். ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. செம ஸ்லிம்மாக இருக்கும் நடிகர் அஜித்தை அவரது ரசிகர்கள், சமூக வலைதளங்களில் தெறிக்க விடுகின்றனர்.

கையில் தழும்பு
அந்த புகைப்படங்களில் அஜித்தின் கையில் தழும்பு ஒன்று தெரிகிறது. அது வலிமை ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்தால் உண்டானது என்றும் கூறப்படுகிறது. இதனைக் குறிப்பிட்டு பதிவிட்டு வரும் ரசிகர்கள், ரிஸ்க் எடுக்க வேண்டாம் தல எனக் கூறி வருகின்றனர். இதற்கிடையே #Valimai என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











