வாழ்க்கை ஒரு வட்டம்டா.. ஒல்லியான அஜித்.. பருமனான விஜய்.. கம்பேர் பண்ணி கலாய்க்கும் ஏகே ஃபேன்ஸ்!
சென்னை: விஸ்வாசம், வலிமை, துணிவு என தொடர்ந்து நடிகர் அஜித்தின் உடல் பருமனை வைத்து ஏகப்பட்ட ட்ரோல்களை விஜய் ரசிகர்கள் செய்து வந்த நிலையில், தற்போது நடிகர் அஜித் ஒல்லியாக மாறிவிட்டார் என்றும் விஜய் வெயிட் போட்டு வருகிறார் என்றும் அஜித் ரசிகர்களும் உருவ கேலியை ஆரம்பித்துள்ளனர்.
பாடி ஷேமிங் என சொல்லப்படும் உருவ கேலிக்கு சினிமா பிரபலங்கள் அதிகளவில் ஆளாகி வருகின்றனர். தனுஷ் போல ஒல்லியாக இருந்தால் ஒல்லி பிச்சான் என சொல்லி கலாய்க்கும் ரசிகர்கள், சூர்யாவின் உயரம் குறித்தும், அனுஷ்கா, சிம்பு பருமன் ஆனது குறித்தும் ஏகப்பட்ட மீம்களையும் ட்ரோல்களையும் சோஷியல் மீடியாவில் போட்டுத் தாக்கினர்.

தளபதி 69 படத்தில் வயதான தோற்றத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் நிலையில், அவரது உடல் எடையை அதிகரித்து நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், விஜய்யின் லேட்டஸ்ட் லுக்கை பார்த்த அஜித் ரசிகர்கள் வாழ்க்கை ஒரு வட்டம் டா என்றும் இப்போ எங்க அஜித்தை பார்த்தியா என்றும் கலாய்த்து வருகின்றனர்.
ஒல்லியான அஜித்: ஆணழகன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்த நடிகர் அஜித்திற்கு நரைமுடி வந்தநிலையில், அதையும் நெகட்டிவாக பார்க்காமல் அவரது ரசிகர்கள் ஜார்ஜ் க்ளூனி போல சால்ட் பெப்பர் லுக்கில் தாறுமாறாக இருக்கிறாரே என கொண்டாடி வந்தனர். அஜித் பருமனாக இருந்த போது ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்டோர் வலிமை படத்தின் விமர்சனத்தின் போதே பஜன்லால் சேட் என்றெல்லாம் பாடி ஷேமிங் செய்தனர். இந்நிலையில், குட் பேட் அக்லி படத்திற்காக திடீரென தனது உடல் எடையை 18 கிலோ வரை நடிகர் அஜித் குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அஜித்தின் ஸ்லிம் தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் ஹேப்பியானது மட்டுமின்றி விஜய்யின் தற்போதைய தோற்றத்தை வைத்து கம்பேர் செய்து கலாய்த்தும் வருகின்றனர்.

பருமனான விஜய்: நடிகைகள் அனுஷ்கா, மஞ்சிமா மோகன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பல நடிகைகள் பருமனான உடனே அவர்களை ஃபீல்ட் அவுட் என ட்ரோல் செய்து வரும் நெட்டிசன்கள் தற்போது நடிகர் விஜய் பருமனாக மாறியுள்ளதையும் அதிகளவில் ட்ரோல் செய்து வருகின்றனர். எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 69 படத்திற்கான லுக் தான் இது என்றும் கோட் படத்துக்காக விஜய்யும் உடல் எடையை குறைத்து எப்படி நடித்திருந்தார் என்பது ஊருக்கே தெரியும் என விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களின் கிண்டல்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
யூனிவர்ஸ் பேலன்ஸ் பண்ணிடுச்சு: வாழ்க்கை ஒரு வட்டம் என விஜய்யின் திருமலை படத்தின் வசனத்தையும் கர்மா இஸ் பூமராங் என்கிற தத்துவத்தையும் யூனிவர்ஸ் சரிசமமா ஆக்கிடுச்சு பார்த்தீங்களான்னும் அஜித் ரசிகர்கள் தற்போது விஜய் மற்றும் அஜித்தின் லேட்டஸ்ட் லுக்கை கம்பேர் செய்து ஏகப்பட்ட ட்ரோல் ட்வீட்களை பதிவிட்டு வருகின்றனர்.

அஜித்துக்கு அஜித்தே போட்டி: வரும் பொங்கலுக்கு அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரு படங்களும் போட்டியாக ஒரே நாளில் வெளியாகப் போகிறதா? என்கிற கேள்வியும் லைகா நிறுவனம் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனங்கள் இடையே வெடித்துள்ள மோதலில் அஜித் தலையிட்டு சரி செய்வாரா? என்கிற கேள்விகளையும் இன்னொரு பக்கம் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











