விஸ்வாசம் பட போஸ்டரை வித்தியாசமாக கொண்டாடிய அஜித் ரசிகர்கள்.. மதுரையில் தெறி!

மதுரையில் உள்ள ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் இணைந்து விஸ்வாசம் பட போஸ்ட்டரை கொண்டாடும் வகையில் மதுரையில் பைக் ராலி நடத்தி அமர்க்களப்படுத்தியுள்ளனர்.

By Rajeswari

மதுரை: மதுரையில் உள்ள ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் இணைந்து நடிகர் அஜித்தின் விஸ்வாசம் பட போஸ்ட்டரை கொண்டாடும் வகையில் மதுரையில் பைக் ராலி நடத்தி அமர்க்களப்படுத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டில் பெரிய அளவில் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் அஜித்குமார். தன் நடிப்பால் மட்டும் அல்லாமல் தனது தனிப்பட்ட நல்ல குணத்தால் பல ரசிகர்களை தன்வசம் ஈர்த்தவர் இவர்.

Ajith fans celebrates Viswasam poster in a unique way

குறிப்பாக இவருக்கு வட தமிழகத்தில் வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக மதுரையில் அவருக்காக உயிரைக் கொடுக்கும் அளவிற்கு ரசிகர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அஜித் அவர்களின் நடிப்பில் அடுத்ததாக வரவிருக்கும் விஸ்வாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதனைக் கொண்டாடும் வகையில், மதுரையை சேர்ந்த ஒட்டு மொத்த அஜித் ரசிகர்களும் இணைந்து, விசுவாசம் போஸ்டருடன் மாபெரும் பைக் ராலி நடத்தி அமர்க்களப்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக இந்த பைக் ராலியில் அஜித்தை கவுரவிக்கும் வகையில், பொதுமக்கள் மத்தியில் ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பைக் ஓட்டிச் சென்றுள்ளனர்.

அஜித் அவர்களின் போஸ்ட்டரை கொண்டாடும் இந்தச் சம்பவம், பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையவேண்டும் என்றே இவ்வாறு செய்ததாக மதுரையைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X