அஜித்துக்கு எதிரி "தல" மட்டுமே.. அவர் கண்ணுல பயமிருக்குதான்னு பாருங்கய்யா!
சென்னை: விஸ்வாசம் போல் மாஸ் மரண ஹிட்டாக இருக்காது. சமூகத்துக்கு நல்ல கருத்தை சொல்லக் கூடிய சாதாரண படமாகத்தான் இருக்கும் நேர்கொண்ட பார்வை. இது அஜித் ரசிகர்களுக்கான படமே அல்ல. எனவே ஆவரேஜ் கலெக்ஷன் மட்டுமே உறுதி!....இப்படித்தான் 'என்.கே.பி.' படத்தின் ரிலீஸுக்கும் முன்பு பேசிக் கொண்டிருந்தனர்.
ஆனால் அந்த பேச்சுக்களை அடிச்சு துவம்சம் செய்துவிட்டனர் அஜித்தின் தாறுமாறான வெறி ரசிகர்கள். படத்துக்கு மாஸ் ஓப்பனிங் கொடுக்க வேண்டும் என்று நினைத்துத்தான் உள்ளே சென்றனர். ஆனால் படத்தின் வடிவமைப்பும், அஜித்தின் ஆக்ஷன் சீக்வென்ஸும், தல பேசும் தரமான டயலாக்குகளும் இந்தப் படத்தை எங்கோ உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது.

விளைவு, கொண்டாடி தீர்க்கிறார்கள் அஜித்தின் ரசிகர்கள். அவர்கள் மட்டுமா பொது ஆடியன்ஸின் ரிசல்ட்டும் இப்படத்துக்கு பெரிதாய் கைதட்டி இருக்கிறது. 'வாவ்! வர்ரே வாவ்' என்று பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து கை தட்டுவதால் அஜித்தை விட அவரது ரசிகர்களுக்குதான் ஏக சந்தோஷம்.
இதனால் சமூக ஊடகங்களில் தல-யை போற்றிப் புகழ்பாடி வெறித்தனமான பதிவுகளை போடுவதோடு, வழக்கம்போல் விஜய் அண்ட்கோவையும் வறுத்து பொடி பண்ணியிருக்கின்றனர். 'ப்பாருங்கடா எங்க தல-யை. அவர் கண்ணுல ஏதாச்சும் பயம் தெரியுதான்னு! பட ரிலீஸுக்கு முன்னாடி எவ்ளோ ஸீன் போட்டிங்க. இந்தப் படம் மாஸ் படமில்லை, மசாலா படமில்லை. அவுட்டுதான், ஃபிளாப்புதான்னு. ஆனா சிங்கம் மாதிரி வந்து நிற்கிறான் பாரு எங்க தலைவன்.
தமிழ் சினிமாவின் மாஸ் ஓப்பனிங் கிங் எங்காளுதான்னு மறுபடியும் நிரூபிச்சிட்டார் பார்த்தீங்கள்ள. மாஸ் மசாலா படம்னாலும், கிளாஸ் கதையோட்ட படம்னாலும் எங்க தல தான் டா வசூல் கிங்கு. எவன் விசில் ஊதுற சத்தமும் காதுல கேக்கல, எங்களுக்கு கேக்கல." என்று 'பிகில்' படத்தையும், விஜய் ரசிகர்களையும் கலாய்ச்சு தொங்கவிட்டுள்ளனர்.
முடியலய்யா.. முடியல.. முடிச்சு விடுங்கய்யா சீக்கிரமா.. !
- ஜி.தாமிரா


Click it and Unblock the Notifications











