அடுத்தடுத்த படங்களின் அறிவிப்புகள்... அதிரடி காட்டும் அஜித்... ரசிகர்கள் உற்சாகம்!

சென்னை : நடிகர் அஜித்தின் வலிமை படம் சிறப்பான வெற்றியை பெற்றுள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் அவரது ஏகே61 படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது. இதனிடையே அவரது ஏகே62 படத்தின் அறிவிப்பு இன்றைய தினம் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்

நடிகர் அஜித்

நடிகர் அஜித் நடிப்பில் அவரது 60வது படம் வலிமை வசூல்ரீதியாக சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. தொடர்ந்து திரையரங்குகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. படத்தில் ஆக்ஷன் காட்சிகள் தூக்கலாக இருந்ததாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையிலும் ரசிகர்களின் கொண்டாட்டதிற்கு உள்ளாகியிள்ளது.

ஏகே61 படத்தின் சூட்டிங்

ஏகே61 படத்தின் சூட்டிங்

இந்நிலையில் அவரது ஏகே61 படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்பு போடப்பட்டுள்ளது. மேலும் படத்தின் சூட்டிங் வரும் 18ம் தேதி ஐதராபாத்தில் துவங்கவுள்ளதாகவும் அன்றைய தினமே படத்தின் டைட்டிலும் அறிவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்திற்காக ஐதராபாத்தில் மவுண்ட் ரோட் செட்டிங் அமைக்கப்பட்டு வருகிறது.

தீபாவளி ரிலீஸ்

தீபாவளி ரிலீஸ்

இந்தப் படத்தையும் ஹெச் வினோத் இயக்கவுள்ளார். மேலும் போனி கபூர் இந்தப் படத்தை இயக்கவுள்ளார். வலிமை படத்தை போல இல்லாமல் இந்தப் படத்தின் சூட்டிங்கை விரைவில் முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளது. இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.

ஏகே62 பட அறிவிப்பு

ஏகே62 பட அறிவிப்பு

இந்நிலையில் அஜித்தின் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பும் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட உள்ளது. ஏகே62 படமான அந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் படம் உருவாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தில் அஜித்திற்கு நயன்தாரா ஜோடியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அஜித் அதிரடி

அஜித் அதிரடி

ஹெச் வினோத்தின் இயக்கத்தில் உருவாகவுள்ள ஏகே61 படத்தின் நடிகர் நடிகைகள் தேர்வே இன்னும் இறுதிச் செய்யப்படவில்லை. மாறாக படத்தின் சூட்டிங்கும் இன்னும் துவங்கப்படவில்லை. இந்நிலையில் அஜித்தின் அடுத்தப்படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளது அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Recommended Video

'Ajith Sir-அ பத்தி பேசுறதுக்கு யாருக்கும் அருகதை கிடையாது...' | Mayan Movie Audio Launch
அஜித் படங்களின் அடுத்தடுத்த அப்டேட்கள்

அஜித் படங்களின் அடுத்தடுத்த அப்டேட்கள்

இன்றைய தினம் ஏகே62 படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில், ஏகே61 படம் வரும் 18ம் தேதி சூட்டிங் துவங்கவுள்ளது. இதனிடையே வலிமை படம் வரும் 20ம் தேதி 25வது நாளை எட்டவுள்ளது. இவ்வாறு அஜித் படங்களின் அடுத்தடுத்த அப்டேட்கள் ரசிகர்களிடயே அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X