திருச்சியில் ரசிகர்களை கூட்ட மாஸ் பிளான் போட்ட அஜித் ரசிகர்கள்.. அனால், கடைசியில் இப்படி ஆகிடுச்சே!

சென்னை: திருச்சியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்ற தகவல் வெளியான நிலையில், அவரை காண குழந்தைகள் முதல் பெரியவர்கள் என ஏகப்பட்ட ஊர் மக்கள் திறண்டு விட்டனர்.

மக்கள் வெள்ளத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய காவல்துறையினர், நடிகர் அஜித்திடம் கோரிக்கை வைக்க அவரும் ரசிகர்களை வெளியே வந்து சந்தித்து கையசைத்து உற்சாகப்படுத்தினார்.

இந்நிலையில், இன்று காலை மிகப்பெரிய கூட்டத்தை திரட்ட அஜித் ரசிகர்கள் முடிவெடுத்த நிலையில், அவர்களின் திட்டம் கடைசியில் பலனளிக்காமல் போய் விட்டது.

ரசிகர்களை சந்தித்த அஜித்

ரசிகர்களை சந்தித்த அஜித்

திருச்சியில் நடைபெற்று வரும் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ரைஃபிள் சுடும் போட்டியில் பங்கேற்ற நடிகர் அஜித்தை காண அங்கே ஊர் மக்களும், இளைஞர்களும் பெருங்கூட்டமாக அலைமோதினர். இந்த செய்தியை அறிந்த நடிகர் அஜித் மொட்டை மாடி மீது ஏறியபடி ஒட்டுமொத்த மக்களையும் சந்தித்து அவர்களை நோக்கி கையசைத்தும், ஃபிளையிங் கிஸ் கொடுத்தும், தம்ப்ஸ் அப் காட்டியும் உற்சாகப்படுத்தினார்.

கைக் குழந்தையுடன்

கைக் குழந்தையுடன்

அஜித்தின் தீவிர ரசிகையான ஒருவர் கைக் குழந்தையுடன் அஜித்தை பார்க்காமல் இங்கே இருந்து நகரவே மாட்டேன் என இரவு நேரத்திலும் அடம்பிடித்த நிலையில், போலீஸார் அந்த தகவலை அஜித்துக்கு கூறினர். உடனடியாக அந்த பெண்ணை உள்ளேயே அழைத்து அவரிடம் பேசிவிட்டு புகைப்படங்களை எடுத்து பத்திரமாக வீட்டுக்கு போங்க என வழியனுப்பி வைத்தார்.

அஜித் ரசிகர்கள் பிளான்

அஜித் ரசிகர்கள் பிளான்

திருச்சி ரைஃபிள் கிளப் முன்பாக நேற்று இரவு வரை அஜித்தை பார்க்க காத்திருந்த ரசிகர்கள், இரவிலும் அவர் வந்து பார்த்து விட்டு சென்றதும் கலைந்து சென்றனர். ஆனால், இன்று காலை மீண்டும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஒன்று திரட்ட அஜித் ரசிகர்கள் முயற்சித்து வருவதை காவல் துறையினர் அறிந்து கொண்ட நிலையில், அவர்களது முயற்சிகள் தவிடு பொடியாகி உள்ளன.

கிளம்பி விட்டார்

கிளம்பி விட்டார்

நடிகர் அஜித்தை பார்க்க இன்றும் ரசிகர்கள் கூட்டமாக வரத் தொடங்கிய நிலையில், முன்பாகவே பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்திய காவல்துறையினர், நடிகர் அஜித் இங்கிருந்து கிளம்பி சென்று விட்டார். போட்டியை தடையின்றி நடத்த ஒத்துழைப்பு தாருங்கள் எனக் கேட்டுக் கொண்ட போலீஸார் அஜித் ரசிகர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி உள்ளனர்.

முடிவுக்கு வந்த டிரெண்டிங்

முடிவுக்கு வந்த டிரெண்டிங்

மீண்டும் நடிகர் அஜித் வெளியே வந்து ரசிகர்களை சந்திக்கப் போவதில்லை என்பதை அறிந்த நிலையில், பெரிய பிளான்களை எல்லாம் போட்ட ரசிகர்கள் அப்செட்டாக அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வந்த அஜித் ஹாஷ்டேக்கும் முடிவுக்கு வந்து விட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X