இது சாம்பிள் சம்பவம்தான்.. மெயின் பிக்ச்சர் மே 1 இருக்கு.. தெறிக்கவிடும் அஜித் ஃபேன்ஸ்!

சென்னை: நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் இன்றே டிவிட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

Recommended Video

Valimai Bike Stunt scene | Ajith | H. vinoth | Boney Kapoor

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகர் அஜித், சமூக வலைதளத்தில் எந்த கணக்கையும் வைத்திருக்கவில்லை.

ஆனாலும் டிவிட்டரில் அதிகம் ட்ரென்ட்டானவர்களின் பட்டியலில் கடந்த ஆண்டு இந்தியாவில் முதல் இடத்தை பிடித்தார். ஏதாவது ஒரு விஷயத்துக்காக அடிக்கடி அவரது ரசிகர்களால் ட்ரென்ட் செய்யப்பட்டு வருகிறார்.

 நிவாரண நிதி

நிவாரண நிதி

நடிகர் அஜித், எச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். கொரோனா வைரஸின் தாக்கத்தால் தற்போது படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரண நிதிக்காக தலா 50 லட்சம் ஃபெஃப்சி அமைப்புக்கு 25 லட்சம் ரூபாய் என ஒன்றேகால் கோடி ரூபாய் நிதி வழங்கினார்.

 பிறந்தநாள் கொண்டாட்டம்

பிறந்தநாள் கொண்டாட்டம்

இந்நிலையில் நடிகர் அஜித்தின் பிறந்த நாள் வரும் மே ஒன்றாம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனை ஆண்டு தோறும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர் அஜித் ரசிகர்கள். அந்த வகையில் இந்த ஆண்டு அஜித்தின் பிறந்த நாளை கொண்டாட இப்போதே ரசிகர்கள் தயாராகி விட்டனர்.

சாம்பிள் சம்பவம்தான்

டிவிட்டரில் #மே1தலதிருவிழா என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரென்ட்டாகி வருகிறது. சென்னை ட்ரென்ட்டிங்கில் டாப்பில் உள்ளது. தல ஃபேன்ஸ் கம்யூனிட்டி என்ற பெயரில் பதிவிடப்பட்டுள்ள டிவிட்டில், இது ஒரு சாம்பிள் சம்பவம்தான்.. மெயின் பிக்ச்சர் மே ஃபர்ஸ்ட் இருக்கு என பதிவிடப்பட்டுள்ளது.

அஜித்தின் ஆதிக்கம்

2019 ஆம் ஆண்டின் முதல் பாதியில் பாக்ஸ் ஆபிஸில் விஸ்வாசம் படம் ஆதிக்கம் செலுத்தியது. 2019 பிற்பாதியில் பாக்ஸ் ஆபிஸை நேர்கொண்ட பார்வை ஆதிக்கம் செலுத்தியது. கோலிவுட்டில் தல அஜித்தின் ஆதிக்கம் தான். இந்த ஆண்டு வலிமை படம் தான் பாக்ஸ் ஆபிஸில் ஆதிக்கம் செலுத்தப் போகிறது என இந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபயர் மூடில் பசங்க

ட்ரென்ட்டாகும் அஜித் ஹேஷ்டேக்கை முன்னிட்டு டியர் ஹேட்டர்ஸ் எங்கக்கிட்ட இருந்து தள்ளியிருங்க.. எங்க பசங்க ஃபயர் மூடில் இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 தல அஜித் பிறந்த நாள் டேக் லோடிங் என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X