அடேங்கப்பா.. அஜித் ரசிகர்களுக்கு வந்த அப்படியொரு கோபம்.. டிரெண்டாகும் #ஒரேதலஅஜித்
சென்னை: தல அஜித்தை தவிர வேறு யாரையும் தல என சொல்லக் கூடாது என்பதற்காக #ஒரேதலஅஜித் ஹாஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
நடிகர் விஜய் மற்றும் கிரிக்கெட் வீரர் தோனி சந்திப்பு புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டான நிலையில், உடனடியாக அதனை எதிர்த்து அதற்கு போட்டியாக #ஒரேதலஅஜித் ஹாஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் ஆரம்பித்துள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியை செல்லமாக 'தல' என ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், தோனி எப்போதுமே 'தல' ஆக முடியாது என அஜித் ரசிகர்கள் கோபத்துடன் ஏகப்பட்ட ட்ரோல் மீம்களை பதிவிட்டு வருகின்றனர்.
விஜய் – தோனி சந்திப்பு வீடியோ
தளபதி விஜய் மற்றும் கிரிக்கெட் உலகின் 'தல' தோனி சந்திப்பு புகைப்படங்கள் வெளியான உடனே #ThalapathyVijay என்கிற ஹாஷ்டேக்கை போட்டு விஜய் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். இந்நிலையில், விஜய் மற்றும் தோனி சந்தித்து பேசும் வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஸ்டார்ட்டான சண்டை
வார்த்தைக்கு வார்த்தை தல - தளபதி சந்திப்பு என விஜய் ரசிகர்கள் ட்வீட்களை தெறிக்க விட்டு தல அஜித்தின் ரசிகர்களை வெறுப்பேற்றினர். அதனால், ஆத்திரம் அடைந்த அஜித் ரசிகர்கள் எதிர் ஹாஷ்டேக்கை உருவாக்கி யாரு ரியல் 'தல'ன்னு மோதி பார்த்து விடுவோம் என களமிறங்கி உள்ளனர்.

ஒரே தல அஜித்
#ஒரேதலஅஜித் என்கிற ஹாஷ்டேக்கை உருவாக்கி யாருக்கு ரசிகர்கள் பலம் அதிகம் என பார்த்து விடுவோம் என விஜய் மற்றும் தோனி ரசிகர்களுக்கு சவால் விட்டு இந்த ஹாஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

பிராண்ட்
2001ம் ஆண்டு வெளியான தீனா படத்தில் தான் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தல என அவரது கூட்டாளிகள் அழைப்பது போல் வசனம் எழுதியிருப்பார். அப்போது இருந்தே தல என்பது நடிகர் அஜித்தின் பிராண்ட் என அஜித் ரசிகர்கள் போட்டோக்களை வெளியிட்டு ட்வீட் போட்டு வருகின்றனர்.

தல வித் தளபதி
நடிகர் அஜித் மற்றும் தற்போதைய தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் இணைந்திருக்கும் த்ரோபேக் புகைப்படத்தை ஷேர் செய்து இதுதான் ரியல் தல வித் தளபதி அது ரீல் என அஜித் ரசிகர்கள் ட்ரோல் ட்வீட்களை போட்டு தங்களின் கோபத்தை கொட்டித் தீர்த்து வருகின்றனர்.

அல்டிமேட் ஸ்டார்
தல அஜித் தான் எப்போதுமே அல்டிமேட் ஸ்டார் என டிரெண்டாகி வரும் #ஒரேதலஅஜித் வலிமை பட பாடலின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர் அஜித் ரசிகர்கள். இதற்கு எதிராக விஜய் ரசிகர்களும் ட்ரோல் கமெண்ட்டுகள் மற்றும் ட்வீட்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஏஜ் ரிவர்ஸ் கியர்லயா
தோனி மற்றும் விஜய்யின் புகைப்படங்கள் வைரலான நிலையில், இருவருமே 13 ஆண்டுகளுக்கு முன் பார்த்தது போலவே உள்ளதாக ரசிகர்கள் கம்பேர் செய்து போட்டோக்களை போட்டு வந்தனர். இந்நிலையில், ஏஜ் ரிவர்ஸ் கியர்லயா என கலாய்த்து அஜித் ரசிகர்கள் எல்லை மீறி கிண்டல் செய்து வருகின்றனர்.

ரொம்ப பாவம்டா
"இந்த பக்கம் #ஒரேதலஅஜித்னு ட்ரெண்ட் பண்ணி தோனிய திட்டிட்டு இருக்கானுங்க.. அந்த பக்கம் தல தளபதினு போட்டோ போட்டு வெறுப்பேத்திட்டு இருக்கானுங்க.. உண்மையாவே (தல - தோனி Mutuals) நாங்க ரொம்ப பாவம்டா" என அஜித் மற்றும் தோனி ரசிகர்கள் புலம்பித் தவிக்கின்றனர்.

நெல்சன் உஷார்
தல அண்ட் தளபதின்னு போட்டா அடுத்து தல அஜித் படத்தை இயக்க முடியாதே.. தல அஜித் ரசிகர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகி விடுவோமே என உணர்ந்த இயக்குநர் நெல்சன் பீஸ்ட் அண்ட் லயன்.. டபுள் பீஸ்ட் மோட் ஆன் என இருவருக்கும் நடுவே அவரும் நிற்கும் புதிய புகைப்படத்தை ஷேர் செய்து சேஃப் ஆகி விட்டார்.


Click it and Unblock the Notifications











