Don't Miss!
- News
தமிழக மக்களிளிடமிருந்து அன்புடன்! நிவாரண பொருட்களுடன் பாய்ந்த ’டான் பின்’! வழியனுப்பி வைத்த முதல்வர்
- Finance
மார்ச் காலாண்டு முடிவுகள்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது..!
- Sports
சிஎஸ்கேவுக்கு எதிராக செய்யனுமா? முடியவே முடியாது..! கிறிஸ் கெயிலிடம் பேசிய சத்குரு ஜக்கி வாசுதேவ்
- Automobiles
ஒரு சில ஊர்ல கன்னாபின்னானு ஓட்றாங்க... எந்த நகரில் நல்ல கார் டிரைவர்கள் அதிகம் இருக்கறாங்க தெரியுமா?
- Technology
விவோ ஒய்75 4ஜி விரைவில் இந்தியாவில் அறிமுகம்: 44 எம்பி செல்பி கேமரா அம்சம்., பட்ஜெட் விலை!
- Lifestyle
வெங்காய சட்னி
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மாஸ்ன்னா இதுதான் மாஸ்...டிரெண்டிங்கில் அஜித்திசம்...இது தான் காரணமா
சென்னை : ட்விட்டரில் அஜித்திற்கு இருக்கும் மாசை பார்த்து திரையுலகமே மிரண்டு போய் உள்ளது. அஜித் படம் ரிலீசாகி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டாலும், அவர்களின் படங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு வந்தனர். இதனால் ட்விட்டரில் அதிகமான முறை #Valimai, #ValimaiUpdate போன்ற ஹாஷ்டேக்களை டிரெண்டிங் ஆக்கினர். இதனால் 2021 ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் அதிக முறை டிரெண்டிங் செய்யப்பட்ட ஹாஷ்டேக்குகளில் வலிமை தான் முதலிடம் பிடித்தது.
கேட்
உமனுடன்
இணைந்து
மிரட்ட
வருகிறார்
புதிய
பேட்மேன்..
புதிய
போஸ்டருடன்
வெளியான
ரிலீஸ்
தேதி!

ஏகே 61 ஆர்வத்தில் ரசிகர்கள்
கொரோனா பரவல் காரணமாக பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13 ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட வலிமை, கடைசி நேரத்தில் ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் அஜித்தின் அடுத்த படமான ஏகே 61 படம் பற்றிய எதிர்பார்ப்பில் கவனம் செலுத்த துவங்கினர். ஏகே 61 படம் பற்றிய அடுத்தடுத்த தகவல்களும் கசிந்து வருகிறது.

டிரெண்டிங்னா அஜித் தான்
இதனால் குஷியான ரசிகர்கள் #AK61 என்ற ஹாட்டேக்கை உருவாக்கி, கடந்த ஒரு வாரமாக ட்விட்டரில் டிரெண்டிங்கில் வைத்துள்ளனர். இந்நிலையில் தற்போது #Valimai ஹாஷ்டேக்கை மீண்டும் டிரெண்டிங் ஆக்கி உள்ளனர். ட்விட்டர் டிரெண்டிங்கில் முதல் இடத்தில் #AK61, இரண்டாவது இடத்தில் #Valimai ஹாஷ்டேக்குகள் இடம்பிடித்துள்ளன.

இப்படியொரு மாஸா
இதில் அஜித்தின் போட்டோக்கள், அஜித் பற்றியும் அவரது குடும்பத்தினர் பற்றியும் பல தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். ஒரு நடிகரின் படம் ரிலீசாகி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அப்டேட்கள் கூட தொடர்ந்து வருவதில்லை. இருந்தாலும் இப்படியொரு மாஸா என அனைவரும் மிரண்டு போய் உள்ளனர்.

எல்லாமே சொல்லிட்டாங்களே
அஜித் அடுத்தபடியாக நடிக்க உள்ள ஏகே 61 படத்தின் பூஜை மார்ச் மாதம் 9 ம் தேதி நடைபெற உள்ளதாகவும், 7 மாதங்களில் ஷுட்டிங்கை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏகே 61 பற்றி எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில் பூஜை துவங்கி ரிலீஸ் தேதி வரை அனைத்தையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

ஏகே 61 ரிலீசும் தெரிஞ்சிடுச்சா
மார்ச் 9 ம் தேதி ஷுட்டிங் துவங்குகிறது. ஐதராபாத், புதுச்சேரியில் ஷுட்டிங் நடக்க உள்ளது. ஹீரோயின் பூஜா ஹெக்டே. ஹீரோ - வில்லன் என இரட்டை வேடங்களில் அஜித் நடிக்கிறார். இசையமைப்பாளர் அனிருத். ஏகே 61 படம் 2022 ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளது என்பது வரை அனைத்தையும் பகிர்ந்து விட்டனர் அஜித் ரசிகர்கள்.