Ajith: அடுத்தடுத்து நைட் பார்ட்டி... அஜித்தின் பாச வலையில் சிக்கிய விடாமுயற்சி டீம்... ஒரே மஜா தான்!

அஜர்பைஜான்: அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் மீண்டும் தொடங்கியது. ஏற்கனவே இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில், தற்போது மூன்றாவது ஷெட்யூல் தொடங்கியுள்ளது. இதுவும் அஜர்பைஜானில் தொடங்கிய நிலையில், விடாமுயற்சி குழுவினருக்கு அஜித் நைட் பார்ட்டி கொடுத்து அசத்தியுள்ளார்.

அடுத்தடுத்து அஜித்தின் நைட் பார்ட்டி
துணிவு படத்தைத் தொடர்ந்து லைகா பேனரில் ஏகே 62-வில் நடிக்க கமிட்டானார் அஜித். விக்னேஷ் சிவன் இயக்கவிருந்த இந்தப் படம் கடைசி நேரத்தில் மகிழ் திருமேனி கைகளுக்குச் சென்றது. இதனால் ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளை முடித்துவிட்டு படப்பிடிப்பை தொடர தாமதமானது. அதன்படி, இரு மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய விடாமுயற்சி ஷூட்டிங் அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது.

Ajith gave a treat to VidaaMuyarchi stunt technicians


முதல் இரண்டு ஷெட்யூல்கள் முடிந்துவிட்டதால் தற்போது மூன்றாவது கட்ட படப்பிடிப்பு இரு தினங்களுக்கு முன்னர் தொடங்கியது. முன்னதாக நியூ இயர் கொண்டாட்டத்துக்காக தனது குடும்பத்துடன் துபாய் சென்றிருந்தார் அஜித். இதனால் தான் விஜயகாந்தின் மறைவுக்கும், கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கும் அஜித் வரவில்லை என சொல்லப்பட்டது. இந்நிலையில், துபாயில் இருந்து அஜர்பைஜான் சென்ற அஜித், மீண்டும் படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார்.

இதனையடுத்து முதலில் அஜித்தின் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம். முழுக்க முழுக்க ரோட் ஷோ ஆக்‌ஷன் மூவியாக உருவாகும் விடாமுயற்சி அஜித் ரசிகர்களுக்கு தரமான ட்ரீட்டாக இருக்கும் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது. இதனால், விடாமுயற்சி படத்தின் ஸ்டண்ட் டெக்னீஷியன்களுக்கு ட்ரீட் கொடுத்துள்ளார் அஜித். இந்தப் படத்திற்கு சில ஹாலிவுட் ஸ்டண்ட் டெக்னீஷியன்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுடன் அஜித் இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

முன்னதாக விடாமுயற்சியில் தன்னுடன் நடிக்கும் அர்ஜுன், ஆரவ் ஆகியோருக்கு ட்ரீட் கொடுத்து அசத்தினார் அஜித். அதனைத் தொடர்ந்து தற்போது அடுத்த விருந்து கொடுத்து விடாமுயற்சி படக்குழுவை தனது பாச வலையில் விழ வைத்துள்ளார் அஜித். இதனிடையே அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி விடாமுயற்சி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இதுபற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக புத்தாண்டு ஸ்பெஷலாக விடாமுயற்சி படத்தில் இருந்து அஜித்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அல்லது விடாமுயற்சி ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகலாம் எனவும் சொல்லப்பட்டது. ஆனால், வழக்கம் போல அப்டேட் எதும் கொடுக்காமல் ரசிகர்களை ஏமாற்றி வருகிறது படக்குழு. இருப்பினும் படம் வெளியாகும் போது தரமான ட்ரீட்டாக இருக்குமே என ரசிகர்கள் தங்களுக்கு தாங்களே ஆறுதல் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X